Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

திட்டமிடப்பட்ட நகரமயமாக்கலின் மூலம் டெங்கு நுளம்பு பரவலை தடுக்க வலியுறுத்தல்!

In இலங்கை
Updated: 11:38 GMT, Jan 2, 2018 | Published: 11:38 GMT, Jan 2, 2018 |
0 Comments
1072
This post was written by : Risha
Medical Superintendent MSM. Jabeer

திட்டமிடப்பட்ட நகரமயமாக்கலின் மூலம் டெங்கு நுளம்பு பெருகுவதைத் தடுப்பதற்கு உள்ளூராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என காத்தான்குடி ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் எம்.எஸ்.எம்.ஜாபீர் தெரிவித்துள்ளார்.

காத்தான்குடிப் பிரதேசத்தில் தலைதூக்கியுள்ள டெங்கு நோய் அச்சுறுத்தல் தொடர்பாக இன்று (செவ்வாய்க்கிழமை) கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

தொடர்ந்து தெரிவித்த அவர், ”மட்டக்களப்பு, காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் கடந்த டிசம்பெர் மாதம் மாத்திரம் 117 டெங்கு நோயாளர்கள் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். அவர்களுள் 56 பேர் சிறுவர்களும் குழந்தைகளுமாவர்.

இதேவேளை கடந்த டிசெம்பெர் மாதம் காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரிப் பிரிவில் 6 மற்றும் 7 வயதுடைய இரு சிறுமிகள் டெங்கு நோயால் பீடிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

டெங்கு நோய்த் தாக்கத்திலிருந்து பாதுகாத்துக் கொள்வதற்கு நுளம்புகளையும் நுளம்பு பெருகும் இடங்களையும் இல்லாதொழிப்பதே சரியான தீர்வு.

திட்டமிடப்பட்ட நகர மயமாக்கலை உள்ளுராட்சி நிறுவனங்கள் மேற்கொண்டு கட்டடங்களையும் அவற்றைச் சூழவுள்ள இடங்களையும் கண்காணித்து டெங்கு நுளம்பு பல்கிப் பெருகுவதைத் தடுப்பதற்கு உரிய உள்ளூராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg