Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

நாட்டிற்கு பணியாற்ற முடியாவிடின் பதவியில் நீடிக்க மாட்டேன்: அர்ஜுன

In இலங்கை
Updated: 12:01 GMT, Jan 2, 2018 | Published: 12:01 GMT, Jan 2, 2018 |
0 Comments
1120
This post was written by : Risha

நாட்டிற்காக எதனையும் செய்ய முடியாவிடின் நான் இந்த பதவியில் இருக்க மாட்டேன். நான் பதவியில் இருப்பது மக்களுக்கு பணியாற்றுவதற்காகவே என பெற்றேறோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தில் இடம்பெற்ற புத்தாண்டு நிகழ்வில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், ”நிறுவனத்தில் ஊழலை இல்லாதொழித்து, ஆறு மாதகாலப்பகுதிக்குள் பாரிய அபிவிருத்தி திட்டங்களை அபிவிருத்தி செய்ய முடிந்துள்ளது.

கடந்த காலத்தில் ஐ.ஓ.சி சிறுவனத்தின் எரிபொருள் விநியோகம் தொடர்பாக பிரச்சினை ஏற்பட்டது. இன்றும் எரிபொருள் விநியோகம் தொடர்பாக மூன்றாம் நான்காம் தரப்பினரை கொண்டுவர முயற்சிக்கின்றனர்.

ஆனால் இந்த நிறுவனத்தை தனியார் நிறுவனமாக மாற்றும் எண்ணம் எங்களில் யாருக்கும் கிடையாது. எங்களால் மட்டுமே இந்த நிறுவனத்தை பாதுகாக்க முடியும். இதனால் இந்த நிறுவனத்தில் உள்ளவர்கள் 99 வீதம் வேலைசெய்தாலும் பிரயோஜனமில்லை. நாங்கள் மிகுதியையும் செய்து முடிக்கவேண்டும்.

இப்போது நாங்கள் இந்த நிறுவனத்தின் அபிவிருத்தி பணிகளை செய்து முடிக்கவேண்டும். 40 வருடங்களுக்கு மேலாக அமைக்க முடியாத எண்ணைத் தாங்கிகளை நாங்கள் இன்று அமைக்கவுள்ளோம். 6 எண்ணைத் தாங்கிகளை ஆறு மாதத்திற்குள் அமைக்க திட்டமிட்டுள்ளோம்.

கடந்த காலத்தில் எண்ணை சுத்திகரிப்பு நிலையத்தை புனர்நிர்மானம் செய்யவேண்டிய தேவையிருக்கவில்லை. நான் கடமைப்பாட்டுடன் சொல்லுகின்றேன் ஆறுமாத காலத்திற்குள் இந்த வேலைத்திட்டத்தை ஆரம்பிப்போம்.

இப்போதும் எனக்கு கூறுகிரார்கள் இதை செய்யவேண்டாம் என்று. இதைவிட நல்லது கூடிய விலைக்கு வெளியிலிருந்து எண்ணையை இறக்குமதி செய்வதென்று. ஆனால் நான் நாடு என்ற ரீதியிலேயே முடிவ செய்வேன். என்னால் செய்யமுடியவில்லை என்றால் அந்தப்பதவியில் இருக்கமாட்டேன். நான் இங்கு வந்தது வேலைசெய்வதற்கு” என்றார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg