Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வடகொரியா – தென்கொரியா கலந்துரையாடல்: சீனா ஆதரவு

In உலகம்
Updated: 11:52 GMT, Jan 2, 2018 | Published: 11:52 GMT, Jan 2, 2018 |
0 Comments
1191
This post was written by : Suganthini

வடகொரியாவுடன் தென்கொரியா நடத்தும் உயர்மட்டக் கலந்துரையாடலுக்கு ஆதரவளிப்பதாக, சீனா அறிவித்துள்ளது.

சீனாவின் தலைநகரான பீஜிங்கில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பிலேயே, சீனா தனது ஆதரவை வழங்க அறிவித்துள்ளது.

இது தொடர்பாக சீன வெளிவிவகார அமைச்சு தெரிவிக்கையில், ‘தென்கொரியாவில் நடைபெறவுள்ள குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் வடகொரியாவைச் சேர்ந்த குழுவினர் கலந்துகொள்வது தொடர்பாக, வடகொரியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த தென்கொரியா இணக்கம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், வடகொரியாவுக்கும் தென்கொரியாவுக்கிடையிலான பேச்சுவார்த்தைக்கு எமது ஆதரவை வழங்கத் தீர்மானித்துள்ளோம்’ எனத் தெரிவித்துள்ளது.

தென்கொரியாவில் எதிர்வரும் பெப்ரவரியில் நடைபெறவுள்ள குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் கலந்துகொள்ளும் வகையில், வடகொரியாவிலிருந்து குழுவொன்றை அனுப்பவுள்ளமை தொடர்பாகக் கவனம் செலுத்தி வருவதாக, வடகொரிய ஜனாதிபதி கிம் ஜொங் உன் நேற்று தெரிவித்திருந்ததுடன், இது தொடர்பாக உடனடிச் சந்திப்பு நடத்தவும், அவர் அழைப்பு விடுத்திருந்தார்.

வடகொரிய ஜனாதிபதியின் இந்த அழைப்பை ஏற்றுள்ள தென்கொரியா, அந்நாட்டுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான சமிக்ஞையை இன்று வெளிப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg