Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

எதிர்க்கட்சி அலுவலகக் கடமைகளை ஆரம்பித்து வைத்தார் சம்பந்தன்!

In இலங்கை
Published: 11:57 GMT, Jan 2, 2018 |
0 Comments
1083
icon_com
This post was written by : Varothayan
2018-01-02-PHOTO-00001668

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்திலும் 2018 ஆம் ஆண்டுக்கான பணிகள் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

எதிர்கட்சித்தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் இந்த நிகழ்வில் கலந்து கொண்டார். அண்மைக்காலமாக சுகயீனமுற்றிருந்த சம்பந்தன், இந்த நிகழ்வில் பங்கேற்று குத்துவிளக்கேற்றி அலுவலகக் கடமைகளை ஆரம்பித்து வைத்தார்.

உள்ளுராட்சி மன்றத் தேர்தல்கள் நெருங்குகின்ற நிலையில், மாவட்டந்தோறும் கூட்டமைப்பின் சார்பில் பிரசாரங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. இதில் தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, செயலாளர் கி.துரைராஜசிங்கம், கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோரே பங்கேற்று வருகின்றனர்.

இவர்களுடன் ரொலோவின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், புளொட்டின் தலைவர் சித்தார்த்தன் ஆகியோரும் கலந்து கொள்கின்றனர். இந்நிலையில், இதுவரை எந்தவொரு பிரசாரக்கலந்துரையாடல்களிலும் பங்கேற்காத சம்பந்தன், விரைவில் தேர்தல் களம் புகுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

2018-01-02-PHOTO-00001657 2018-01-02-PHOTO-00001658

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg