Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பல்கலைக்கழக செயற்பாட்டை சீர்குலைக்க தீயசக்திகள் முயற்சி: உபவேந்தர்

In இலங்கை
Updated: 12:35 GMT, Jan 2, 2018 | Published: 12:35 GMT, Jan 2, 2018 |
0 Comments
1089
This post was written by : Risha
SEUSL - 15

மூவின மக்களின் சமாதான கேந்திர நிலையமாக திகழும் தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் குழப்பங்களை ஏற்படுத்தி, பல்கலைக்கழக நடவடிக்கைகளை சீர்குலைப்பதற்கு சில தீய சக்திகள் முயற்சிப்பதாக பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் எம்.எம்.எம்.நாஜிம் தெரிவித்தார்.

2018ஆம் ஆண்டின் முதல்நாள் பணிகளை ஆரம்பிக்கும் வகையிலான சத்தியப்பிரமாண நிகழ்வு பல்கலைக்கழக பதிவாளர் எச்.அப்துல் சத்தார் தலைமையில் இன்று (செவ்வாய்க்கிழமை) ஒலுவில் வளாகத்தில் வைபவ ரீதியாக நடைபெற்றது. குறித்த நிகழ்வில் அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், ”தென்கிழக்கு பல்கலைக்கழகம் பல பரிணாம வளர்ச்சிகளைக் கண்டு நாட்டின் அபிவிருத்திக்கும், உயர் கல்விக்கும் பெரும் பங்காற்றி வருகின்றது. கடந்த காலங்களில் இப்பல்கலைக்கழகத்தின் வளர்ச்சிக்காக இங்கு கடமையாற்றும் உத்தியோகஸ்தர்கள், ஊழியர்கள் மற்றும் மாணவர்களின் ஒத்துழைப்பும் இருந்ததுபோன்று, எதிர்காலத்திலும் ஒற்றுமையாக செயற்பாடுகளை முன்னெடுத்து பல்கலைக்கழகத்துக்கு பெருமை சேர்க்க வேண்டும்.

ஆனால், பல்கலைக்கழக ஒற்றுமையை சீர்குலைப்பதற்கு சில தீய சத்திகள் முயற்சித்து வருகின்றன. சட்டத்தை யாரும் கையில் எடுத்து செயற்பட முடியாது.

நிறுவனமொன்றில் கடமையாற்றும் சகல தரப்பினரும் ஒரு குடும்பத்தைப் போன்றவர்கள். ஒரு குடும்பம் எவ்வாறு வாழ வேண்டுமோ அவ்வாறே அந்த நிறுவனமும் தனது செயற்பாட்டை முன்மாதிரியாக கொண்டு செல்வதற்கு சகல தரப்பினரின் ஒத்துழைப்பும், ஆலோசனைகளும் அவசியமாகும்” என்றார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg