Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வடக்கு முதல்வரின் தீர்மானத்திற்கு எதிராகவே போராட்டம்: இ.போ.ச. வடக்கு ஊழியர்கள்

In இலங்கை
Published: 12:28 GMT, Jan 2, 2018 |
0 Comments
1167
This post was written by : Varothayan

வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனின் தீர்மானத்திற்கு எதிராகவே போராட்டம் இடம்பெறுகின்றதே தவிர, முதலமைச்சருக்கு எதிரானவர்களால் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படவில்லை என வட மாகாண ஜனநாயக போக்குவரத்து ஊழியர்கள் சங்கத் தலைவர் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் கோண்டாவிலில் அமைந்துள்ள டிப்போவில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

எமது கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டால் புதிய பேரூந்து நிலையத்திற்கு செல்ல தயார் என தெரிவித்துள்ள இலங்கை போக்குவரத்து சபையின் வட பிராந்திய சாலைகளின் இணைந்த தொழிற்சங்கம், இலங்கை போக்குவரத்து சபையின் தனித்துவம் பாதுகாக்கப்பட வேண்டும், வவுனியா புதிய பேரூந்து நிலையம் இரண்டாக பிரிக்கப்பட்டு அரச மற்றும் தனியார் பேரூந்துகளுக்கு தனித்தனியாக நிர்வாகம் அமைக்கப்படல் வேண்டும், இந்த கோரிக்கைகளுக்கு எழுத்து மூலம் உறுதிமொழி தரப்பட வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்துள்ளது.

இவற்றை நிறைவேற்றினால் எமது தொடர் பணிப்புறக்கணிப்பை கைவிடத் தயார் எனவும் அறிவித்துள்ளது.

வவுனியாவில் அமைக்கப்பட்டுள்ள பேரூந்து இ.போ.சபைக்கு என அமைக்கப்படவில்லை. ஆரம்பத்தில் தனியார் பேரூந்து சேவைகளை சீர் செய்வதற்காகவே அமைக்கப்பட்டிருந்தது. எனினும் அது வெற்றிபெறாத காரணத்தால் எம்மீது திணிக்கப்பட்டுள்ளது. பேரூந்து நிலையம் அமைக்கப்படும் போதும் எம்மோடு கலந்துரையாடப்படவில்லை.

வடக்கு மாகாண முதலமைச்சரை நாங்கள் மதிக்கின்றோம். வேறு எவராலும் இந்த பிரச்சனைக்கு தீர்வை காண முடியாது. ஆகவே இந்த பிரச்சனை பற்றி தெரிந்தவர்கள் முதலமைச்சருக்கு எடுத்துக்கூறி புரிய வையுங்கள். இது தவிர எமது போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும் வகையில் கிழக்கு மாகாண இலங்கை போக்குவரத்து சங்கத்தினரும் ஆதரவு தருவதாக கூறியுள்ளார்கள் என செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட இணைந்த தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் குறிப்பிட்டுள்ளனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg