Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அனைத்தும் அம்பலமாக்கப்படும்! – தீர்ப்பு ஜனாதிபதியின் கைகளில்

In இலங்கை
Published: 12:27 GMT, Jan 2, 2018 |
0 Comments
1183
This post was written by : Puvanes
mahinda amaraweera001

மத்திய வங்கியில் பாரிய பிணை முறி மோசடி இடம்பெற்றுள்ளது இதனை மறைக்க முடியாது, தற்போது இந்த விடயம் அம்பலமாகிவிட்டது என அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற மக்கள் சந்திப்பு ஒன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார். தொடர்ந்தும் அவர் அங்கு கருத்து வெளியிடுகையில்,

தற்போதைய நிலையில் மத்திய வங்கியில் இடம்பெற்ற பாரிய ஊழல் வெளிச்சத்திற்கு வந்துவிட்டது. இதனை இல்லை என இப்போது எம்மால் கூறிவிடமுடியாது.

இந்த ஊழல் விபரங்கள் தற்போது வெளிச்சத்திற்கு வந்துவிட்டது. அத்துடன் இதனுடன் தொடர்புபட்ட திருடர்கள் யார் என்ற விபரங்கள் அனைத்தும் அம்பலமாக்கப்படும்.

இந்த பாரிய ஊழலுடன் தொடர்புட்ட அனைவர்மீதும் எமது அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும், அதேபோன்று எமது ஜனாதிபதியும் இந்த ஊழலுக்கு எதிரான கடுமையான நடவடிக்கையினை எடுப்பார், அது மட்டுமல்லாமல் ஊழல் செய்யப்பட்ட பணம் மீண்டும் கைப்பற்றப்படும் எனவும் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

இதேவேளை, நாளை (புதன்கிழமை) இலங்கை மத்திய வங்கியின் பிணை முறி விவகாரம் தொடர்பில் கையளிக்கப்பட்டுள்ள அறிக்கை தொடர்பில், விஷேட அறிவிப்பை விடுக்கவுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

குறித்த ஊழலுடன் ஐக்கியதேசிய கட்சியும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் தொடர்புபட்டுள்ளதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுவரும் நிலையில் ஜனாதிபதியின் அறிவிப்பு தொடர்பில் எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், தற்போது பல்வேறு அரசியல் தலைவர்களும் மத்திய வங்கி பிணை முறி ஊழல் தொடர்பில் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg