Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கொழுப்பில் துப்பாக்கிச்சூடு – நால்வர் படுகாயம்

In இலங்கை
Published: 14:13 GMT, Jan 2, 2018 |
0 Comments
1189
This post was written by : Puvanes
gun001

கொழும்பு – கிராண்பாஸ் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பத்தில் நால்வர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை குறித்த பகுதியில், போதைப்பொருள் கைமாற்று தொடர்பாக ஏற்பட்ட முறுகல் நிலையினைத் தொடர்ந்தே துப்பாக்கிச்சூடு இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் தரப்பு செய்திகள் தெரிவிக்கின்றன.

குறித்த சம்பவத்தில் 25 தொடக்கம் 30 வயதுக்கு உட்பட்பவர்களே படு காயமடைந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், சம்பவத்தில் காயமடைந்தவர்கள் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், காயமடைந்த இருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் தீவிரமாக முன்னெடுத்துவருகின்றனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg