Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சிறுத்தையின் தாக்குதலால் 7 பேர் படுகாயம்!

In இலங்கை
Updated: 15:08 GMT, Jan 2, 2018 | Published: 15:08 GMT, Jan 2, 2018 |
0 Comments
1132
This post was written by : Puvanes

ஹட்டன் – பன்மூர் தோட்டத்தில் சிறுத்தையின் தாக்குதலுக்கு இதுவரை 7 பேர் இலக்காகி பலத்தகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இன்று (செவ்வாய்க்கிழமை) பகல் முதல் குறித்த பகுதியில் சிறுத்தையின் நடமாட்டத்தால் பொதுமக்கள் பாதிப்படைந்துள்ளனர். அதனைத் தொடர்ந்து சிறுத்தையை கட்டுப்படுத்துவதற்காக வனஜீவராசிகள் பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் ஹட்டன் பொலிஸார் துப்பாக்கிகளுடன் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.

எனினும் மரத்திற்கு மரம் தாவி கட்டுப்படுத்த வந்தவர்கள் மீது சிறுத்தை தாக்குதலை மேற்கொண்டுள்ளது. இதனால் பலர் சிறுத்தையின் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளனர்.

பொதுமக்களின் குடியிருப்பு பகுதிகளுக்கு சிறுத்தை இடம்பெயருமானால் அதனால் ஏற்படும் பாதிப்புகள் அதிகரிக்கும் என்பதால் சிறுத்தையை பிடிக்கும் முயற்சிகள் தீவிரமாக இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg