Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அனைவரும் ஒத்துழைப்பு வழங்குவார்கள் – பிரதமரின் நம்பிக்கை!

In இலங்கை
Updated: 15:27 GMT, Jan 2, 2018 | Published: 15:27 GMT, Jan 2, 2018 |
0 Comments
1223
This post was written by : Puvanes

புதிய தேர்தல் முறைமைக்கு அமைய எதிர்வரும் உள்ளூராட்சிசபைத் தேர்தலை நடத்துவதற்கு அனைத்து தரப்பினரும் அரசாங்கத்திற்கு தமது ஒத்துழைப்பினை வழங்குவார்கள் என எதிர்பார்ப்பதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

அலரி மாளிகையில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற ஊடக ஒழுக்கக் கோவையை நாடாளுமன்றில் சமர்ப்பிப்பதற்கான பிரேரணையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க கையெழுத்திடும் நிகழ்வின் போது கருத்து தெரிவிக்கையிலேயே இதனைக் கூறியுள்ளார்.

மேலும், புதிய தேர்தல் முறைமையின் அடிப்படையில் தேர்தலில் அதிக வாக்குகளைப் பெற்ற அரசியல் கட்சி ஒன்று, உறுப்பினர் ஒருவரையாவது பெற்றுக் கொள்ளாத நிலையில் இருந்தால் குறித்த அந்த கட்சிக்கு விகிதாசார அடிப்படையில் உறுப்பினரை வழங்க இடமுண்டு எனவும் பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.

புதிய தேர்தல் முறைமையின்படி பெண்களின் பிரதிநித்துவமும் உறுதிப்படுத்தப்படும் எனக்குறிப்பிட்ட பிரதமர், இந்த புதிய முறைமையை செயற்படுத்துவதற்கு அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு வழங்குவார்கள் என தான் நம்புவதாகவும் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, பிரதமரின் குறித்த கருத்துகள் ஊடாக அவர் அரசியல் ரீதியில் இலாபமீட்ட முயற்சி செய்து வருவதாக நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தல்களை கண்காணிப்பதற்கான தேசிய அமைப்பு (கபே) குற்றச்சாட்டு ஒன்றினை முன்வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg