Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

6 இலட்சத்து 50 ஆயிரத்திற்கும் அதிகமான வழக்குகள் நிலுவையில் உள்ளன!

In இலங்கை
Published: 15:52 GMT, Jan 2, 2018 |
0 Comments
1072
This post was written by : Puvanes
athukorala001

தற்போது சுமார் 6 இலட்சத்து 50 ஆயிரத்திற்கும் அதிகமான வழக்குகள் விசாரணைகள் பூர்த்தியடையாது நிலுவையில் உள்ளதாக நீதியமைச்சர் தலதா அத்துகோரள தெரிவித்துள்ளார்.

2018ஆம் ஆண்டிற்காக பணிகளை இன்று (செவ்வாய்க்கிழமை) ஆரம்பித்ததன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.

மேலும், சாதாரண வழக்குகளினால் பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்கு புத்தாண்டில் நிவாரண ரீதியில் நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனக் குறிப்பிட்ட அவர், வழக்குகள் விரைவாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

தற்போதைய சூழலில் சாதாரண வழக்கில் சிக்கியுள்ள பெரும்பாலானவர்கள் பல்வேறு சிரமங்களுக்கு முகம்கொடுத்து வருகின்றனர் அவர்களுக்கு தகுந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனவும் அத்துகோரள குறிப்பிட்டுள்ளார்.

நீதித் துறையில் சேவைபுரிவோருக்கு தனிப்பட்ட இன, மத விடயங்களும் அரசியல் விடயங்களும் காணப்படலாம் எனினும் நீதித்துறை எனவரும் போது இவற்றினைத் தவிர்த்து சேவைபுரிய வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg