Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

யாழில் மர்மக்காய்ச்சல் எதுவும் இல்லை! – மக்கள் பீதியடையத் தேவையில்லை

In இலங்கை
Published: 16:34 GMT, Jan 2, 2018 |
0 Comments
1163
This post was written by : Puvanes
jaffna001

யாழில் மர்மக்காய்ச்சல் ஏற்பட்டதாகவும் அதனால் இறப்புக்கள் ஏற்பட்டதாகவும் வெளிவருகின்ற தகவல்களில் எந்தவித உண்மையும் இல்லை. இவ்வாறான தகவல்கள் தொடர்பில் பொதுமக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை என யாழ் போதான வைத்தியசாலைப் பணிப்பாளர் வைத்தியகலாநிதி சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

யாழில் மர்மக்காய்ச்சல் என வெளிவரும் செய்திகள் தொடர்பில் இன்று (செவ்வாய்க்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

யாழில் மர்மக் காய்ச்சலோ அல்லது அதனால் ஏதும் உயிரிழப்புகளோ ஏற்படவில்லை. குறிப்பாக கடந்த சில மாதங்களிற்கு முன்னர் முல்லைத்தீவு மாவட்டத்திலேயே இன்புளுவன்சா பி வகையான நோய் காணப்பட்டிருந்தது.

அந்த நோயால் அங்குள்ள மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டிருந்ததுடன் ஒரு சிலர் இறந்தும் இருக்கின்றனர். இவ்வாறானதொரு நிலையிலேயே முல்லைத்தீவில் சிகிச்சை பெற்ற ஒருவர் மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

எனினும், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருந்தார். அவருடைய அந்த இறப்பு இன்புளுவன்சா பி வகை நோய்த் தாக்கம் என பதியப்பட்டுள்ளது. அது ஒரு மர்ம இறப்போ அல்லது காரணம் தெரியாத இறப்போ அல்ல. இதுவரையிலும் இந்தப் பகுதியில் அவ்வாறான உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை.

ஆகவே மர்ம நோய்கள் இருக்கின்றன என வெளியாகும் தகவல்களில் உண்மையில்லை. நோய்த் தாக்கங்கள் தொடர்பாக பீதியடையவும் தேவையில்லை.

நோய்கள் ஏற்படுமிடத்து அருகிலுள்ள வைத்தியசாலைக்கோ அல்லது போதனா வைத்தியசாலைக்கோ செல்ல வேண்டும். அதனை விடுத்து வேறு ஏதேனும் முறைகளை நாடுவதனைத் தவித்துக்கொள்ளுமாறும் சத்தியமூர்த்தி மேலும் தெரிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg