Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பயங்கரவாத தாக்குதல் அபாயம்: இலங்கைக்கு பிரித்தானியா எச்சரிக்கை!

In இலங்கை
Updated: 06:51 GMT, Jan 3, 2018 | Published: 02:48 GMT, Jan 3, 2018 |
0 Comments
1751
This post was written by : Varshini

பயங்கரவாத தாக்குதல் அச்சம் இலங்கையிலும் காணப்படுவதாக, பிரித்தானிய வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இதனால் இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளும் தமது நாட்டு பிரஜைகளை அவதானமாக செயற்படுமாறு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

பிரித்தானிய வெளிவிவகார மற்றும் பொதுநலவாய அலுவலகம் விடுத்துள்ள பயண அறிவுறுத்தலில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயங்கரவாத தாக்குதல் நடத்தப்படக்கூடிய சாத்தியங்கள் காணப்படும் நாடுகளின் பட்டியலில் இலங்கையும் உள்ளடங்குவதாக எச்சரிக்கும் பிரித்தானியா, பயங்கரவாதிகளின் தாக்குதல் தொடர்பான வரைபடத்தில் தாய்லாந்து தொடக்கம் மாலைதீவு மற்றும் பிலிப்பைன்ஸ் வரையிலான இடங்கள் உள்ளடங்குவதாக சுட்டிக்காட்டியுள்ளது.

தற்போது நீண்ட விடுமுறை காலமென்பதால், சனநடமாட்டம் அதிகமாக காணப்படும் இடங்கள் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகைதரும் இடங்களை இலக்குவைத்தே பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்துவதாக பிரித்தானியா மேலும் தெரிவித்துள்ளது. இந்நிலையில், பொது நிகழ்வுகள், கொண்டாங்கள், களியாட்டங்கள் போன்றவை இடம்பெறும் இடங்களில் அவதானமாக செயற்படுமான பிரித்தானியா எச்சரித்துள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg