Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கிழக்கு பல்கலையில் பல்லின பாரம்பரியங்களைப் பிரதிபலிக்கும் உணவுச்சாலை!

In இலங்கை
Updated: 04:18 GMT, Jan 3, 2018 | Published: 04:18 GMT, Jan 3, 2018 |
0 Comments
1146
This post was written by : Risha

இலங்கை கிழக்குப் பல்கலைக்கழக சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவகத்தில் பல்லின பாரம்பரியங்களைப் பிரதிபலிக்கும் உணவுச்சாலை திறந்து வைக்கப்பட்டுள்ளது.

‘உணவு உற்பத்தி ஆண்டு 2018’ என்ற ஜனாதிபதியின் பிரகடனத்திற்கிணங்க இந்த பாரம்பரிய உணவுச்சாலை இன்று (புதன்கிழமை) திறந்து வைக்கப்பட்டுள்ளது.

அதன்படி, இந்த பாரம்பரிய உணவுச்சாலையானது ‘அமுது’ சமூக நிறுவக அட்டில்சாலை எனும் பெயரில் இயங்கத் தொடங்கியுள்ளது.

பாரம்பரிய உள்ளுர் உணவு வகைகளைத் தயாரித்து வழங்கும் நோக்கில் சமூகங்களை இணைத்து அவர்களின் உற்பத்திகளுக்கான இடத்தினை பெற்றுக்கொடுக்கும் களமாக இச்செயற்பாடு அமைந்துள்ளது.

அதேவேளை, மாணவர்களின் கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளைத் தாண்டி பல்லின சமூகத்தில் காணப்படுகின்ற சுய உற்பத்தியாளர்களை ஊக்குவித்து அவர்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்துவதற்குத் ஏதுவாகவும் இது அமைகிறது என நிறுவக பணிப்பாளர் கலாநிதி சி.ஜெய்சங்கர் தெரிவித்தார்.

5 4

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg