Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மைதானத்தில் விம்மி அழுது மன்னிப்பு கேட்ட சபீர் ரஹ்மான்!

In கிாிக்கட்
Published: 04:57 GMT, Jan 3, 2018 |
0 Comments
1060
This post was written by : Anojkiyan
sab

கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவதற்கு 6 மாதங்கள் தடைபெற்ற பங்களாதேஷ் அணியின் துடுப்பாட்ட வீரர் சபீர் ரஹ்மான், தான் செய்த தவறுக்காக மைதானத்தில் விம்மி அழுது மன்னிப்பு கோரியுள்ளார்.

மைதானத்தில் நடுவரிடமும் இரசிகர் ஒருவரிடமும் தவறாக நடந்துக்கொண்டமைக்காக மே மாதம் வரை அவர் எந்த போட்டிகளிலும் விளையாட முடியாதவாறு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாகவே அவர் இவ்வாறு மைதானத்தில் அழுதுள்ளார்.

கடந்த வாரம் நடந்த தேசிய தொடரில், சொந்த ஊர் அணியான ராஜ்சேஹி தேசிய அணிக்காக விளையாடிய அவர், நடுவரிடமும் இரசிகர் ஒருவரிடமும் தவறாக நடந்துக்கொண்டதோடு, நடுவரை கடுமையாக சாடியுள்ளார்.

இதனால் அவருக்கு 6 மாதத்திற்கு கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த 6 மாதத்திற்குள் அவர் 1 கோடி ரூபாய் பணம் கொடுக்க வேண்டும் என பங்களாதேஷ் கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg