பெரு விபத்தில் உயிரிழந்தோர் 48ஆக உயர்வு (2ஆம் இணைப்பு)
பெருவின் பஸமயோ பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை, 48ஆக உயர்வடைந்துள்ளது.
பெருவில் வாகன விபத்து: 36 பேர் உயிரிழப்பு
பெருவில் இடம்பெற்ற வாகன விபத்தில், 36 பேர் உயிரிழந்துள்ளதாக, பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பெருவின் தலைநகரான லிமாவிலிருந்து 80 கிலோமீற்றர் தூரத்திலுள்ள பஸமயோ பகுதியில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இந்த விபத்துச் சம்பவித்துள்ளது.
பயணிகள் பேருந்தொன்றும் டிரக் வண்டியொன்றும் நேருக்குநேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தின்போது, பேருந்து பாரிய பள்ளத்தினுள் விழுந்ததாகவும், பொலிஸார் கூறியுள்ளனர். இதில் 36 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்தில் காயமடைந்தவர்களின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் உயிரிழப்புகள் அதிகரிக்கலாமெனவும், பொலிஸார் கூறியுள்ளனர்.
சுமார் 50 பயணிகளுடன் லிமா நகரை நோக்கிச் சென்றுகொண்டிருந்த பேருந்தே விபத்துக்குள்ளானது.