Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தினகரன் தரப்பை சமாளிப்பது எப்படி? அ.தி.மு.க. இன்று ஆலோசனை

In இந்தியா
Updated: 04:51 GMT, Jan 3, 2018 | Published: 04:51 GMT, Jan 3, 2018 |
0 Comments
1151
This post was written by : Risha

தினகரன் தரப்பினரை சமாளிப்பது தொடர்பாக ஆராயும் வகையில் அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் இன்று (புதன்கிழமை) கூடியுள்ளனர்.

கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் கே.பழனிசாமி ஆகியோரின் தலைமையில் கட்சியின் தலைமை அலுவலகத்தில் இக்கூட்டம் நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

தமிழக சட்டப்பேரவையின் 2018ஆம் ஆண்டிற்கான முதல் கூட்டம், எதிர்வரும் 8ஆம் திகதி ஆரம்பமாகிறது. சட்டப்பேரவைக் கூட்டத்தில், அண்மையில் நடைபெற்ற ஆர்.கே. நகர்த் தேர்தலில் வெற்றிபெற்ற சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்ற டி.டி.வி.தினகரனும் பங்கேற்கிறார்.

இந்நிலையில், சட்டப்பேரவை கூட்டத்தில் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும். தினகரன் தரப்பினரை எப்படி சமாளிப்பது என்பது குறித்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கு முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் ஆலோசனை வழங்க உள்ளதாகக் கூறப்படுகிறது.

வழமையாக அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் தமிழக சட்டபேரவைக் கூட்டத்திற்கு முதல் நாளே கூடும். ஆனால் தமிழகத்தில் பரபரப்பான அரசியல் சூழல் நிலவிவருகின்ற நிலையில் இம்முறை முன்கூட்டியே கூட்டம் நடத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg