Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இச்சகத்தில் உள்ளோர் எல்லாம் எதிர்த்து நின்ற போதிலும் அச்சம் என்பது இல்லையே!

In கிாிக்கட்
Updated: 06:14 GMT, Jan 3, 2018 | Published: 05:31 GMT, Jan 3, 2018 |
0 Comments
1203
This post was written by : Anojkiyan
asd

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஆஷஸ் டெஸ்ட் தொடர், இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில் சிட்னியில் நாளை (வியாழக்கிழமை) ஆரம்பமாகும் இறுதி டெஸ்ட் போட்டி அனைவரினதும் கவனத்தை ஈர்த்துள்ளது.

3-0 என தொடரை வென்று அவுஸ்ரேலிய அணி சரித்திரம் படைத்துள்ளது. ஆனால் இங்கிலாந்தின் நிலையோ பாரிதாபம்.

பழையன கழிதலும் புதிய புகுதலும் என்பார்கள் அதே போன்று கடந்த கால தோல்விகளை மறந்து ஆண்டினை வெற்றியோடு ஆரம்பிக்க காத்திருக்கிறது இங்கிலாந்து அணி.

தோல்வி மேல் தோல்வி தாங்கி ஆறுதல் வெற்றியையாவது பெறுவோமா என்ற இங்கிலாந்தின் காத்திருப்பு நாளை குக்கின் கையிலேயே உள்ளது என்றால் அது மிகையாகாது.

கடந்த நான்கு போட்டிகளில் பெரிதும் சோபிக்காத இங்கிலாந்து அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் அலைஸ்டர் குக், மீண்டெழுந்து நான்காவது போட்டியில் இரட்டை சதம் அடித்து அணிக்கு உத்வேகம் அளித்தார்.

ஆனால், குறுகிய நேரம் கிடைத்த சந்தோஷத்தையும் ஒரேநாளில் தவிடுபொடியாக்கிவிட்டது அவுஸ்ரேலிய அணி. எனினும் போட்டி சமநிலையில் நிறைவடைந்த போதும் ஆட்டநாயகன் விருது, குக்கின் கடின உழைப்புக்கு அங்கீகாரமாகவும், சற்று ஆறுதலாகவும் அமைந்தது என்றே கூறலாம்.

இதையும் தாண்டி அணியின் கௌரவம் என தாங்கி பிடிக்கும் போது, வயிட் வோஷ் என்ற அவமானத்தோல்வியை விட 3-1 என்ற தோல்வி சற்று கௌரவமாக இருக்கும் என கருதுகிறது இங்கிலாந்து அணி.

இதனை மெய்பிக்க வேண்டுமாயின் குக், இறுதி போட்டியிலும் ஜொலிக்க வேண்டும் என்பது அனைவரினதும் எதிர்பார்ப்பாகும். ஆனால் அதற்கு முட்டுக்கட்டை போட மீண்டும் களத்திற்கு திரும்பியுள்ளார் மிட்செல் ஸ்டாக், உபாதைக் காரணமாக நான்காவது போட்டியில் விளையாடததால் அது சற்று குக்கிற்கு சாதகமாக அமைந்துவிட்டது என்கிறார்கள் விமர்சர்கள்.

ஆனால் வேகத்தால் மிரட்ட கூடிய ஸ்டாக், நாளைய போட்டியில் குக்கிற்கு சவாலாக அமைவார் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. எதுஎவ்வாறாயினும் அவமானத் தோல்வியை தவிர்க்க குக் போராடியே ஆக வேண்டுமென்ற கட்டாயத்தில் உள்ளார்.

இறுதி டெஸ்ட் போட்டி, இங்கிலாந்து, அவுஸ்ரேலிய என்ற யுத்தத்தையும் தாண்டி, குக்-ஸ்டாக் என்ற வீரர்களுக்கிடையிலான மகா யுத்தமாக அமையும் என்பது யதார்த்தமான உண்மை.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg