Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வடகொரியா மீண்டும் ஏவுகணைச் சோதனை: அமெரிக்கா எச்சரிக்கை

In
Published: 05:18 GMT, Jan 3, 2018 |
0 Comments
1272
This post was written by : Suganthini

வடகொரியா மீண்டும் ஏவுகணைச் சோதனை நடத்தினால், அந்நாட்டுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க நேரிடுமென, ஐ.நா.வுக்கான அமெரிக்கத் தூதுவர் நிக்கி ஹலே எச்சரித்துள்ளார்.

வடகொரிய விவகாரம் தொடர்பாக நியூயோர்க்கில் ஊடகவியலாளர்கள் மத்தியில் நேற்று (செவ்வாய்க்கிழமை) கருத்துத் தெரிவித்தபோதே, அவர் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்தபோது, ‘வடகொரியா மற்றுமொரு ஏவுகணைச் சோதனையை நடத்தத் தயாராகி வருவதாக எமக்குத் தகவல்கள் கிடைத்துள்ளன. இருப்பினும், வடகொரியா மீண்டும் ஏவுகணைச் சோதனையை நடத்தாதென்று நாம் எண்ணுகின்றோம்.

எது எவ்வாறாயினும், வடகொரியா மீண்டும் ஏவுகணைச் சோதனை நடத்தினால், அந்நாட்டின் ஆட்சிக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க நேரிடும்’ என்றார்.

அமெரிக்கா, தென்கொரியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளின் எதிர்ப்பை மீறி வடகொரியா ஏவுகணை மற்றும் அணுவாயுதச் சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றன. இறுதியாக கடந்த நொவம்பர் 29ஆம் திகதி புதிய வகையான ஏவுகணையொன்றை வடகொரியா சோதித்திருந்ததுடன், அந்த ஏவுகணை அமெரிக்காவைத் தாக்கும் வல்லமை கொண்டதெனவும் எச்சரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg