Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வெள்ளை வான் கடத்தல்: கடற்படை அதிகாரிக்கு பகிரங்க பிடியாணை

In இலங்கை
Updated: 05:42 GMT, Jan 3, 2018 | Published: 05:42 GMT, Jan 3, 2018 |
0 Comments
1189
This post was written by : Varshini

கொழும்பு மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் 11 தமிழ் இளைஞர்கள் வெள்ளை வானில் கடத்தப்பட்டு காணாமல் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில், கடற்படையின் லெப்டிணன்ட் கொமாண்டர் சந்தன பிரசாத் ஹெட்டியாராச்சியை கைதுசெய்யுமாறு பகிரங்க பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2008 மற்றும் 2009ஆம் ஆண்டு காலப்பகுதியில் இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பான விசாரணை நேற்று (செவ்வாய்க்கிழமை) கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது, சந்தேகநபருக்கு எதிராக பகிரங்க பிடியாணை உத்தரவை பிறப்பித்த நீதவான் லங்கா ஜயரத்ன, வழக்கின் பிரதான சந்தேகநபரான கடற்படையின் முன்னாள் பேச்சாளர் கொமாண்டோ டீ.கே.பி.தசநாயக்க உள்ளிட்ட 6 பேரையும் எதிர்வரும் 16ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜின் கொலை வழக்கில் முன்பு கைதுசெய்யப்பட்டிருந்த லெப்டிணன்ட் கொமாண்டர் சந்தன பிரசாத் ஹெட்டியாராச்சி, பின்னர் விடுவிக்கப்பட்டார். ரவிராஜ் கொலை வழக்கின் தீர்ப்பிற்கெதிராக செய்யப்பட்ட மேன்முறையீட்டின் பிரகாரம் அவரை நீதிமன்றில் ஆஜராகுமாகு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டது. எனினும், அவர் மன்றில் ஆஜராக தவறியதைத் தொடர்ந்து மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் ஊடாகவும் அவரை கைதுசெய்வதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg