Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

த.தே.கூட்டமைப்பை போன்று முஸ்லிம் கூட்டமைப்பும் செயற்படும்: ஹனீபா மதனி நம்பிக்கை

In
Updated: 06:16 GMT, Jan 3, 2018 | Published: 06:15 GMT, Jan 3, 2018 |
0 Comments
1121
This post was written by : Risha
7

தமிழர்களின் நலன்களுக்காக பாடுபடும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு போன்று, முஸ்லிம் கூட்டமைப்பும் எங்களுடைய பிரச்சினைகளைத் தீர்த்துவைக்கும் என தூய முஸ்லிம் காங்கிரஸின் பிரமுகரும், அக்கரைப்பற்று மாநகர சபையின் முன்னாள் எதிர்கட்சித் தலைவருமான எஸ்.எல்.எம்.ஹனீபா மதனி தெரிவித்தார்.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பு மற்றும் தூய முஸ்லிம் காங்கிரஸ் அமைப்புக்கள் இணைந்து உருவாக்கியுள்ள ஐக்கிய மக்கள் கூட்டமைப்பின் அரசியல் களம் தொடர்பாக இன்று (புதன்கிழமை) ஊடகங்களுக்கு விளக்கமளிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், ”அம்பாறை மாவட்டத்திலுள்ள முஸ்லிம் மக்களை ஏமாற்றிவந்த முஸ்லிம் கட்சிகள் என்று பிரதிநிதித்துவப்படுத்திய கட்சிகள் உருப்படியாக எதையுமே செய்யவில்லை. தங்களது பிரதிநிதித்துவத்தையும், அதிகாரத்தையும் தக்கவைத்துக் கொள்வதற்காகவே அவர்கள் போராடி வந்தனர்.

இலங்கையின் அரசியல் வரலாற்றில் தாக்கத்தை ஏற்படுத்துகின்ற ஒரு மாவட்டமாக அம்பாறை திகழ்ந்து வருகின்றது. முஸ்லிம்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட மாவட்டமான அம்பாறையை பிரதிநிதித்துவப்படுத்திய ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸோ, தேசிய காங்கிரஸோ அல்லது வேறு பேரினவாதக் கட்சியோ, முஸ்லிம்கள் எதிர்நோக்கிய பாரிய பிரச்சினைகளை குறிப்பாக நுரைச்சோலை வீட்டுத்திட்டப் பிரச்சினை, வட்டமடு காணிப் பிரச்சினை மற்றும் பொத்துவில் நிலப் பிரச்சினை ஆகியவை உட்பட இன்னோரன்ன பிரச்சினைகளைத் தீர்க்கத் தவறி இருக்கின்றன.

இந்த சந்தர்ப்பத்தில் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸும், முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் முக்கியஸ்தர்களின் ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பும் இணைந்து உருவாக்கியுள்ள ஐக்கிய மக்கள் கூட்டமைப்பும், நாங்களும் இணைந்து ஒரு புதிய தளத்தில், சமூகத்தின் பிரச்சினைகளை வென்றெடுப்பதற்காக இணைந்து பணியாற்ற முடிவு செய்துள்ளோம்” என்றார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg