Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

முக்கோண தொடரில் மத்தியூஸ் இடம்பெறுவாரா?

In கிாிக்கட்
Updated: 06:17 GMT, Jan 3, 2018 | Published: 06:17 GMT, Jan 3, 2018 |
0 Comments
1205
This post was written by : Anojkiyan

பங்களாதேஷ் மற்றும் சிம்பாப்வே அணிகளுக்கெதிரான முக்கோண ஒருநாள் தொடரில், இலங்கை அணியின் நட்சத்திர வீரர் அஞ்சலோ மத்தியூஸ் இடம்பெறுவாரா என்ற கேள்விக்கு எதிர்வரும் 7ஆம் திகதி விடை கிடைக்கவுள்ளது.

இந்திய அணிக்கெதிரான ரி-ருவென்ரி போட்டியில், உபாதைக்குள்ளான மத்தியூஸ், மருத்துவ சிகிச்சைக்கு பின்னர் தற்போது பயிற்சிகளில் ஈடுபட்டுவருகின்றார்.

இந்நிலையில், அவருக்கான உடற்தகுதி சோதனை எதிர்வரும் 7ஆம் திகதி கொழும்பு ஆர். பிரேமதாஸ மைதானத்தில் இடம்பெறவுள்ளது. இதில் அவர் வெற்றிபெறும் பட்சத்தில் பங்களாதேஷில் நடைபெறும் ஆண்டின் முதல் தொடரில் அவருக்கு பங்கேற்கும் வாய்ப்பு கிடைக்கும்.

அத்தோடு இத்தொடருக்காக அணி தெரிவு, எதிர்வரும் 5ஆம் திகதி இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg