Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஈரான் நெருக்கடி: அவசர கூட்டங்களைக் கூட்ட அமெரிக்கா தீர்மானம்!

In உலகம்
Published: 06:40 GMT, Jan 3, 2018 |
0 Comments
1140
This post was written by : Suganthini
nikky

கடந்த சில நாட்களாக ஈரானில் நிலவிவரும் அமைதியற்ற சூழ்நிலை தொடர்பாக விவாதிப்பதற்காக, ஐ.நா. பாதுகாப்புச் சபை மற்றும்; மனித உரிமை பேரவைக் கூட்டங்களை அவசரமாகக் கூட்ட எதிர்பார்த்துள்ளதாக, ஐ.நா.வுக்கான அமெரிக்கத் தூதுவர் நிக்கி ஹலே தெரிவித்துள்ளார்.

ஈரான் விவகாரம் தொடர்பாக அவர் மேலும் தெரிவித்தபோது, ‘ஈரானிய மக்கள் சுதந்திரத்துக்காக அழுவதுடன், அங்கு அமைதியற்ற சூழ்நிலை கடந்த சில நாட்களாக நீடித்து வருகின்றது. இதைப் பார்த்துக்கொண்டு எம்மால் அமைதியாக இருக்க முடியாது. ஆகவே, ஈரானில் அமைதியற்ற சூழ்நிலை தொடர்பாக விவாதிப்பதற்காக, நியூயோர்க்கில் ஐ.நா. பாதுகாப்புச் சபைக்  கூட்டத்தையும் ஜெனீவாவில் மனித உரிமை பேரவைக் கூட்டத்தையும் கூட்ட அமெரிக்கா எதிர்பார்த்துள்ளது’ என்றார்.

ஈரானில் நிலவும் ஊழல் நிறைந்த ஆட்சி மற்றும் ஸ்திரமற்ற பொருளாதார நிலைமையைக் கண்டித்து ஈரானிய மக்கள் கடந்த வாரத்திலிருந்து ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், பொலிஸாருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்குமிடையில் கலவரம் வெடித்துள்ளதுடன், இதுவரையில் 21 பேர் உயிரிழந்துள்ளனர்.

இவ்வாறான சூழ்நிலையிலேயே அவசரமாக ஐ.நா. பாதுகாப்புச் சபை மற்றும் மனித உரிமை பேரவைக் கூட்டங்களை கூட்ட அமெரிக்கா தீர்மானித்துள்ளது.
.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg