Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இந்திய வைர வியாபாரிகள் , புதிய வரிவிதிப்பினால் பாதிப்பு

In இந்தியா
Updated: 11:52 GMT, Jan 3, 2018 | Published: 06:40 GMT, Jan 3, 2018 |
0 Comments
1149
This post was written by : JudeDanish

இந்திய வைர வியாபாரிகள் , ஐக்கிய அரபு இராச்சியத்தினால் கொண்டுவரப்பட்ட மதிப்பு வரி காரணமாக விற்பனை பாதிப்புக்களை சந்தித்து வருவதாகத் தெரிவித்துள்ளனர்.அந்த வகையில் குஜராத், சூரத் நகர் வைர வியாபாரிகள் பெரிதும் பாதிப்படைந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

உலகிலே இரண்டாவது வைர வியாபார நிலையமாக ஐக்கிய அரபு இராச்சியம் காணப்படுகின்றது. இதேவேளை இந்தியாவில் உற்பத்தி செய்யப்படுகின்ற வைர ஆபரணங்கள் டுபாய் சந்தைகளில் விற்பனை செய்யப்படுகின்றது.

இந்த நிலையில் ஐக்கிய அரபு இராச்சியம் வைர நகைகளுக்கு மதிப்பு வரியினை அறிமுகம் செய்துள்ளமையினால் இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படுகின்ற வைர ஆபரணங்களுக்கு அதிக வரி விதிக்கப்படுகின்றது. இதனால் விற்பனை வீழ்ச்சியடைந்துள்ளது.

நாட்டின் வருமானத்தை அதிகரிக்கும் வகையில் ஐக்கிய அரபு இராச்சியம் ஐந்து வீத வரிவிதிப்பினை பெறுமதியான பொருட்களுக்கு விதித்துள்ளது. அதாவது உணவு, ஆடைகள், மின்சார உபகரணங்கள், தொலைபேசிகள், நீர் மற்றும் மின்சார கட்டணங்கள், மற்றும் ஹொட்டல்களுக்கு இந்த வரி விதிப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை இந்தியா அரசாங்கம் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி வர்த்தகத்திற்கு பத்து வீத வரிவிதிப்பினை மேற்கொண்டுள்ள நிலையில் ஐக்கிய அரபு இராச்சியத்தின் வரிவிதிப்பும் தமது வர்த்தகத்தை பாதித்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஐக்கிய அரபு இராச்சியத்திற்கும் இந்தியாவிற்கும் இடையில் 2016 ஆம் ஆண்டு சுமார் 26 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுதியான வர்த்தகம் காணப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg