Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

உரப் பிரச்சினைக்கு இன்றிரவு தீர்வு! – தயாசிறி

In இலங்கை
Updated: 11:48 GMT, Jan 3, 2018 | Published: 06:51 GMT, Jan 3, 2018 |
0 Comments
1219
This post was written by : Varshini

பாகிஸ்தானிலிருந்து இன்றிரவு 40,000 தொன் உரம் இலங்கை வந்தடையுமென அமைச்சரவை இணைப் பேச்சாளரும் அமைச்சருமான தயாசிறி ஜயசேகர குறிப்பிட்டார். அதன் பின்னர், நாட்டில் காணப்படும் உரப் பற்றாக்குறைக்கு தீர்வு காணப்படுமென குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்கள கேட்போர் கூடத்தில் இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் குறிப்பிட்டார்.

உரத்தட்டுப்பாட்டின் காரணமாக விவசாயிகள் பாரிய சிக்கலை எதிர்கொண்டுள்ள நிலையில், இதற்கு தீர்வை பெற்றுத்தருமாறு ஆர்ப்பாட்டங்களிலும் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், முதற்கட்டமாக பாகிஸ்தானிலிருந்து உரம் வந்தடைந்த பின்னர் இப்பிரச்சினைக்கு தீர்வு காணப்படுமென அமைச்சர் தயாசிறி குறிப்பிட்டார்.

உரத்தட்டுப்பாடு தொடர்பில் நேற்றைய அமைச்சரவை கூட்டத்தில் பிரதானமாக கலந்துரையாடப்பட்டதோடு, மூன்று போகங்களிலும் விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாமல் பாதிப்படைந்த விவசாயிகளுக்கு இலவசமாக உரத்தை வழங்குமாறு அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா கோரியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg