பிரபல டென்னிஸ் வீரருக்கு சத்திரசிகிச்சை!

பிரித்தானியாவின் முன்னணி டென்னிஸ் வீரரான ஆன்டி முர்ரே தமது இடுப்பு பகுதியில் சத்திரசிகிச்சை ஒன்றை மேற்கொள்ளவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடைபெற்றுவரும் பிரிஸ்பேன் சர்வதேச டென்னிஸ் தொடரிலிருந்து, இடுப்பு பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக பிரித்தானிய வீரர் ஆன்டி முர்ரே வெளியேறியுள்ளார். இந்நிலையிலேயே குறித்த செய்தி வெளியாகியுள்ளது.
30 வயதான முர்ரே கடந்த ஆண்டு உலகின் முதல் நிலை வீரராக தன்னை நிலைநிறுத்திக் கொண்டார்.
எனினும், காயம் காரணமாக கடந்த ஜூலை மாதம் முதல் டென்னிஸ் தொடர்களில் பங்கேற்காத நிலையில் உலகத்தரவரிசையில் 16 ஆவது இடத்திற்கு பின்தள்ளப்பட்டுள்ளார்.
எனினும் ஜனவரி 15 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள அவுஸ்ரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் பங்கேற்பதற்கு எதிர்ப்பார்த்துள்ளதாகவும் கூறினார்.