Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

காட்டு யானைகளின் நடமாட்டம்: அச்சத்தில் வீடுகளுக்குள் முடங்கிய நெடியமடு மக்கள்!

In இலங்கை
Updated: 07:02 GMT, Jan 3, 2018 | Published: 07:01 GMT, Jan 3, 2018 |
0 Comments
1160
This post was written by : Risha
Elephant

மட்டக்களப்பு – வவுணதீவு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள நெடியமடுக் கிராமத்திற்குள் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளதாக மக்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.

இதனால் மக்கள் வீடுகளுக்குள் முடங்கிக் கிடக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

கற்பானை, மதுரங்கண்டடிச்சேனை, நெடியமடு களிக்குளம் கிராமங்களைச் சேர்ந்த சுமார் 210 இற்கும் மேற்பட்ட குடும்பங்கள் யாட்டு யானைகளின் நடமாட்டத்தினால் உயிராபத்தை எதிர்கொண்டுள்ளனர்.

இது தொடர்பாக மக்கள் கூறுகையில், உன்னிச்சை தொடக்கம் கற்பானை வரையான நீண்ட வனப் பிரதேசங்களில் இருந்து மக்கள் வாழும் விவசாய குடிநிலப் பகுதிகளுக்குள் காட்டு யானைகள் நுழைவதைத் தடுப்பதற்காக காட்டோரங்களில் மின்சார தடுப்பு வேலி அமைக்கப்பட்டிருந்தது.

ஆனால், நெடியமடு பகுதியில் பாதுகாப்பு சாவடியில் பொருத்தப்பட்டிருந்த இந்த மின்சார அதிர்ச்சித் தடுப்பு வேலிகளுக்கு மின்சாரத்தை வழங்கும் செயலூக்கியை சமூக விரோத சக்திகள் கடந்த ஒரு மாதத்திற்கு முன்னர் திருடிச் சென்று விட்டனர். இதனால் கிராமத்திற்குள் யானைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது.

எனினும், புதிதாக தடுப்பு வேலிகளுக்கு மின்சாரத்தை வழங்கும் செயலூக்கியை பொருத்துவதற்கு அதிகாரிகள் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.

இது பெரும்போக நெற்செய்கை மற்றும் சேனைப் பயிர்ச் செய்கைக் காலம் என்பதாலும் மாரிமழை காலம் என்பதாலும் காட்டு யானைகளின் நடமாட்டத்தினால், வாழ்வாதார பிரச்சினைகளை எதிர்நோக்கியிருப்பதாகவும் அவர்கள் மேலும் குறிப்பிட்டனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg