Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

எலினர் புயல்: ஆயிரக்கணக்கான வீடுகளில் மின்தடை

In
Updated: 07:05 GMT, Jan 3, 2018 | Published: 07:05 GMT, Jan 3, 2018 |
0 Comments
1277
This post was written by : Suganthini

பிரித்தானியாவின் பல பகுதிகளிலும் எலினர் (Eleanor) புயல் வீசியதைத் தொடர்ந்து, ஆயிரக்கணக்கான வீடுகளின் மின்விநியோகம் தடைப்பட்டுள்ளதுடன், போக்குவரத்துகளும் பாதிக்கப்பட்டுள்ளன.

வேல்ஸ், இங்கிலாந்து, வட அயர்லாந்து, ஸ்கொட்லாந்து ஆகிய பகுதிகளில் மணிக்கு 80 கிலோமீற்றர் வேகத்தில் எலினர் புயல் வீசுமென்று, பிரித்தானியாவின் வானிலை நிலையம் நேற்று (செவ்வாய்க்கிழமை) எச்சரிக்கை விடுத்திருந்தது.

மேற்படி பகுதிகளில் எலினர் புயல்  வீசியதைத் தொடர்ந்து வட அயர்லாந்து, இங்கிலாந்து, வேல்ஸ் ஆகிய பகுதிகளில் மின்தடைப்பட்டுள்ளன.

வட அயர்லாந்தில் சுமார் 12 ஆயிரம் வீடுகளிலும், இங்கிலாந்தில் சுமார் 2 ஆயிரத்து 700 வீடுகளிலும், வேல்ஸில் சுமார் 460 வீடுகளிலும் மின்தடை ஏற்பட்டுள்ளதாகவும், அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, எலினர் புயல் காரணமாக, வீதிகள் பலவற்றில் மரங்கள் முறிந்து விழுந்துள்ளமையால், போக்குவரத்துகளில் பாதிப்பும் ஏற்பட்டுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg