Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அட்டாளைச்சேனை வைத்தியசாலைக்கான காணி கொள்வனவில் மோசடி!

In இலங்கை
Updated: 07:14 GMT, Jan 3, 2018 | Published: 07:13 GMT, Jan 3, 2018 |
0 Comments
1091
This post was written by : Risha
Nseer IL - 86

அட்டாளைச்சேனை பிரதேச வைத்தியசாலை நுழைவாயிலை விஸ்தரிப்பதற்கான காணி கொள்வனவிற்காக வசூலிக்கப்பட்ட பணத்தில் மோசடி இடம்பெற்றிருப்பதாக சந்தேகிப்பதாக அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முஸ்லிம் காங்கிரஸ் முன்னாள் உறுப்பினரும், வைத்தியசாலை அபிவிருத்திக் குழுவின் முன்னாள் செயலாளருமான ஐ.எல். நசீர் தெரிவித்தார்.

அட்டாளைச்சேனை பிரதேச சபைக்கான தேர்தலில், தேசிய காங்கிரஸ் கட்சியின் குதிரைச் சின்னத்தில் போட்டியிடும் அறபா வட்டார வேட்பாளரை ஆதரித்து பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த போதே அவர் இதனை குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், ‘அட்டாளைச்சேனை வைத்தியசாலையின் அபிவிருத்திக் குழுவினுடைய செயலாளராக 10 வருடங்களுக்கும் அதிகமான காலம் நான் பணியாற்றியுள்ளேன். அக்காலப்பகுதியில் எவ்வித அதிகாரமோ பொதுமக்களின் நிதியுதவியோ இன்றி இரு காணித்துண்டுகள் கொள்வனவு செய்யப்பட்டன.

ஆனால், தற்போது என்ன நடந்திருக்கின்றது? கிழக்கு மாகாண சுகாதார அமைச்சராக பதவி வகித்தவர், அட்டாளைச்சேனையைச் சேர்ந்தவராகவும், முஸ்லிம் காங்கிரஸ் கட்சி பிரமுகராகவும் இருக்கின்றார். மத்திய சுகாதார பிரதியமைச்சரும் அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்தவராகவும், முஸ்லிம் காங்கிரஸின் முக்கியஸ்தராகவும் உள்ளார்.

இந்த அதிகாரங்கள் இருக்கத்தக்கதாகவே, மேற்படி நிதி வசூலிப்பு இடம்பெற்றது. இந்த நிதி வசூலிப்பில் எந்த வெளிப்படைத் தன்மையும் பேணப்படவில்லை. நன்கொடை வழங்கியவர்களுக்கு பற்றுச்சீட்டு வழங்குமாறு பணித்தும் அந்த நடைமுறை பின்றப்படவில்லை. மக்கள் பணத்தில் விழாக்களை நடாத்தி அரசியல் இலாபம் தேட முயற்சிப்பது வெட்கச் செயலாகும்.

கிழக்கு மாகாண சுகாதார அமைச்சராக ஏ.எல். நசீர் பதவி வகித்த போது, அவரின் தலைமையிலேயே மேற்படி நிதி வசூலிப்பு இடம்பெற்றது. இந்த நிலையில் அட்டாளைச்சேனை வைத்தியசாலைக்கான காணியைக் கொள்வனவு செய்வதற்கு நன்கொடையாக நிதி வழங்கியவர்களின் பெயர்ப்பட்டடியலை தயாரித்து மக்கள் பார்வைக்கு இடுமாறும் கோரிக்கை விடுத்திருந்தேன். எனது எந்தக் கோரிக்கையும் கிழக்கு மாகாண முன்னாள் சுகாதார அமைச்சரினாலோ, வைத்தியசாலை அபிவிருத்திக் குழுவினாலே ஏற்றுக்கொள்ளப்படவில்லை.

காணிக் கொள்வனவுக்காக மக்கள் வழங்கிய பணத்துக்கு ஆதாரங்கள் எங்கே? அவ்வாறான ஆதாரங்கள் இருக்குமானால் மக்கள் மன்றுக்கு சமர்ப்பிக்க சம்பந்தப்பட்ட தரப்பினர் முன்வருவார்களா என கேட்கிறேன் என்றார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg