Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அரபு நாடுகளின் ஹீரோ: சிறந்த கால்பந்து வீரராக சாலா தெரிவு

In உதைப்பந்தாட்டம்
Updated: 07:45 GMT, Jan 3, 2018 | Published: 07:45 GMT, Jan 3, 2018 |
0 Comments
1177
This post was written by : Anojkiyan

அரபு நாடுகளின் 2017ஆம் ஆண்டுக்கான சிறந்த கால்பந்து வீரராக எகிப்து கால்பந்து அணியின் மொஹமட் சாலா தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

அரபு நாடுகளைச் சேர்ந்த விளையாட்டுப் பிரிவு செய்தியாளர்கள் சுமார் 100 பேரால் இவர் தெரிவு செய்யப்பட்டார்.

இவரை தொடர்ந்து, சிரிய வீரரான ஒமர் கிரிபின் இரண்டாவது இடத்தையும், அதே நாட்டைச் சேர்ந்த மற்றொரு வீரர் ஒமர் அல் சோமோ மூன்றாவது இடத்தையும் பிடித்தனர்

இங்கிலாந்தின் முன்னணி கால்பந்து கழக அணியான லிவர்பூல் எஃப்சி அணியிலும் விளையாடிவரும் அவர் கடந்த ஆண்டு நடைபெற்ற பிரீமியர் லீக் போட்டியில் 17 கோல்களை அடித்தார். மேலும் மொத்தமாக அனைத்து போட்டிகளையும் சேர்த்து மொத்தம் 23 கோல்களைப் பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg