Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கடும் குளிரான காலநிலை: வைத்தியசேவைகளில் தாமதம்

In
Published: 07:27 GMT, Jan 3, 2018 |
0 Comments
1161
This post was written by : Suganthini
hos

கடும் குளிரான காலநிலை காரணமாக, இங்கிலாந்திலுள்ள வைத்தியசாலைகள் பலவற்றில் அறுவைச் சிகிச்சைகள் மற்றும் வெளிநோயாளர் செயற்பாடுகளை இம்மாதம் 31ஆம் திகதிவரை பிற்போட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, சர்வதேச ஊடகமொன்று தெரிவித்துள்ளது.

பிரித்தானியாவில் இம்முறை கடுமையான பனிப்பொழிவு காணப்படுவதுடன், கடும் குளிரான காலநிலை நிலவிவருகின்றது.

இதன் காரணமாக,  ஏற்கெனவே மேற்கொள்ளத்  திட்டமிடப்பட்ட அறுவைச் சிகிச்சைகள் மற்றும் வெளிநோயாளர் செயற்பாடுகளை பிற்போட வைத்தியசாலைகளில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

சுமார் பத்தாயிரக்கணக்கான அறுவைச் சிகிச்சைகளும், வெளிநோயாளர்கள் நியமனங்களும் பிற்போடப்பட்டுள்ளன. இருப்பினும், புற்றுநோயாளர்களுக்கான சிகிச்சை மற்றும் வேறு அவசர சிகிச்சைகள் முன்னெடுக்கப்படுமெனவும், அந்த ஊடகம் மேலும் கூறியுள்ளது.

இதேவேளை, அவசர சிகிச்சை தேவைப்படுபவர்கள் மாத்திரம், சிகிச்சை பெற்றுக்கொள்ள முடியுமென்று பொதுமக்களுக்கு, மில்டன் கீன்ஸ் பல்கலைக்கழக வைத்தியசாலை அறிவுறுத்தியுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg