Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தமிழர் யாருக்கு சோரம் போகாதவர்கள் என்பதை நிரூபிக்க வேண்டும்: அரியநேத்திரன்

In இலங்கை
Updated: 07:42 GMT, Jan 3, 2018 | Published: 07:41 GMT, Jan 3, 2018 |
0 Comments
1325
This post was written by : Risha

தமிழ் மக்கள் யாருக்கும் சோரம் போகாதவர்கள் என்பதை நிரூபிக்கும் வகையில், தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு வாக்களித்து எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தனின் கரங்களை பலப்படுத்த வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், பட்டிருப்பு தொகுதி இலங்கை தமிழரசுகட்சி தலைவருமான அரியநேத்திரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு – இலுப்படிச்சேனை சந்தியில் தமிழ்தேசிய கூட்டமைப்பின் உள்ளுராட்சிமன்ற தேர்தல் அலுவலகத்தை நேற்று (செவ்வாய்கிழமை) திறந்துவைத்து உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், ”நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தமிழ் தேசிய கூட்மைப்புக்கு வடக்கு கிழக்கு மக்கள் வழங்கும் ஆணை, ஊர் அபிவிருத்திக்கு அப்பால் மக்கள் ஒரே கொள்கையில் பயணிக்கிறார்கள் என்பதை சர்வதேசத்துக்கு கொண்டுச் சேர்க்க வேண்டும்.

கடந்த 2009, மே மாதம் 19ஆம் திகதி விடுதலைப் புலிகளின் மௌனத்திற்கு பின்னரான அனைத்து தேர்தல்களின் போதும் வழங்கப்பட்ட மக்கள் ஆணையின் மூலம், வடக்கு, கிழக்கு மக்களின் தலைமை தமிழ்தேசிய கூட்டமைப்புத் தான் என்பதை நிரூபிக்கப்பட்டுள்ளது.

அதனால்தான் இன்று சர்வதேச அரங்கில் தமிழ் தேசிய கூட்டமைப்பு வடக்கு- கிழக்கு மக்களின் தலைமையாக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. அவ்வாறான நிலையில் தற்போது கடந்த 2015 ஆண்டுக்குப் பின் வடகிழக்கு மக்களுக்கான நிரந்தர அரசியல் தீர்வுத்திட்டம் ஒன்றை வழங்கும் முயற்சிகள் நாடாளுமன்றம் ஊடாக எடுக்கப்பட்டு தற்போது இடைக்கால அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டநிலையில் இந்த உள்ளூராட்சி சபை தேர்தலுக்கு நாம் முகம்கொடுக்கின்றோம்.

இந்நிலையில், இலங்கை தமிழரசு கட்சியை தோற்கடிக்க வேண்டும் என்ற பிரசாரத்தை சிலர் முன்னெடுத்து வருகின்றனர். ஆனால், உண்மையை உணர்ந்தவர்களாக இத்தேர்தலில் வடக்கு- கிழக்கு மக்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பின் வீட்டுச் சின்னத்திற்கு வாக்களித்து எமக்கு அரசியல் தீர்வு மிகவும் அவசியம் என்பதை மீண்டும் நிரூபிக்கும் வேண்டும்” என்றார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg