Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ரஜினி மன்றத்தில் 50 லட்சம் பேர் இணைவு!

In இந்தியா
Updated: 07:47 GMT, Jan 3, 2018 | Published: 07:47 GMT, Jan 3, 2018 |
0 Comments
1256
This post was written by : Elakkiya

அரசியலுக்குள் நுழைவதாக நடிகர் ரஜினிகாந்த் அறிவித்துள்ள நிலையில் ரஜினி மன்றத்தில் 50 லட்சம் பேர் இணைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தனது அரசியல் பிரவேசத்திற்கு முன்னோடியாக ரஜினி மன்றம் என்ற இணையத்தளத்தை உருவாக்கிய ரஜினிகாந்த் அதில் இணைந்து கொள்ளுமாறு இரசிகர்களுக்கு அழைப்பு விடுத்திருந்தார்.

இந்நிலையில் இதுவரை 50 லட்சம் பேர் குறித்த இணையத்தளம் ஊடாக இணைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தமிழ்நாட்டு அரசியலில் காலடி எடுத்து வைக்கவுள்ளதாக கடந்த ஞாயிற்றுக்கிழமை அறிவிப்பு வெளியிட்ட நடிகர் ரஜினிகாந்த், தமிழக சட்டமன்ற தேர்தலில் சகல தொகுதிகளிலும் தனித்து களமிறங்கவுள்ளதாகவும் மக்களுக்கு செய்யவேண்டிய கடமைகள் பலவுண்டு என்றும், காலத்தின் கட்டாயத்தின் பிரகாரம் அரசியலுக்கு வருவதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

மேலும், மூன்று வருட காலத்தில் தனது இலக்கை அடைய முடியாத பட்சத்தில் அரசியலிருந்து விலகிச் செல்வேன் என்றும் கூறியிருந்தார்.

அதுமட்டுமல்ல தமிழகத்தில் சாதி பாகுபாடற்ற நேர்மையான ஆன்மீக கலாசாரத்தை உருவாக்குவதே தனது அரசியல் பிரவேசத்தின் இலக்கும் என்றும் குறிப்பிட்டிருந்தார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg