Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பிரெக்சிற் விமர்சனம் முடிவுக்கு வரும்: லியாம் பொக்ஸ்

In
Published: 08:06 GMT, Jan 3, 2018 |
0 Comments
1091
This post was written by : Suganthini
fox

பிரெக்சிற் விவகாரம் தொடர்பான சர்ச்சைக்குரிய விமர்சனம் இந்த வருடத்தில் முடிவுக்கு வருமென, பிரித்தானியாவின் வர்த்தக அமைச்சர் லியாம் பொக்ஸ் தெரிவித்துள்ளார்.

கொன்சர்வேட்டிவ் இணையத்தளத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) பதிவிட்டுள்ள செய்திக் குறிப்பிலேயே, அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்தபோது, ‘பிரஸ்ஸல்ஸுடனான பிரித்தானியாவின் விவாகரத்துச் சட்டமூலத்தின் மூலம் பாரிய வாய்ப்புக் கிடைத்துள்ளது. இந்நிலையில், பிரெக்சிற் தொடர்பான சர்ச்சைக்குரிய விமர்சனங்கள் இந்த வருடத்தில் முடிவுக்கு வரும்.

மேலும், ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேற முற்படுவது வெடிகுண்டு விவகாரமல்ல’ என்றார்.

 பிரித்தானியாவில் வெளிநாடுகளின் சிறந்த முதலீடுகள் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளதாகவும், அவர் கூறியுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg