Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தேர்தல் அறிவிப்பால் அரசியல் யாப்பு உருவாக்கப் பணி பிற்போடப்பட்டதா?

In இலங்கை
Published: 09:18 GMT, Jan 3, 2018 |
0 Comments
1162
This post was written by : Varshini

இம்மாதம் 23ஆம் திகதி கூடவுள்ள நாடாளுமன்ற அமர்வுடன், புதிய அரசியல் யாப்பு உருவாக்கம் தொடர்பான பணி மீள ஆரம்பிக்கப்படுமென அமைச்சரவை இணைப் பேச்சாளரும் சுகாதார அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் இன்றைய வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பின்போது, தேர்தல் அறிவிப்பால் அரசியல் யாப்பு உருவாக்கப் பணி பிற்போடப்பட்டதா என எமது ஆதவன் செய்தியாளர் கேள்வியெழுப்பினார். இதற்கு பதிலளிக்கும்போதே ராஜித மேற்குறித்த விடயத்தைக் குறிப்பிட்டார்.

மேலும், ஜெருசலேம் விவகாரம் தொடர்பில் ஐ.நா.வில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்திற்கு ஆதரவாக இலங்கை வாக்களித்ததால், இலங்கை பாதிப்பை எதிர்கொண்டுள்ளதா என்றும் கேள்வியெழுப்பப்பட்டது.

இதற்கு பதிலளித்த ராஜித, ஜெருசலேம் விவகாரத்தில் தற்போதைய அரசாங்கம் மட்டுமன்றி இதற்கு முன் வந்த அரசாங்கங்களும் ஒரே நிலைப்பாட்டையே கொண்டிருந்தாகவும், ஐ.நா. தீர்மானத்தை ஆதரித்தே இலங்கை வாக்களித்ததாகவும் குறிப்பிட்டார். எனினும், பாலஸ்தீனத்திற்கு ஆதரவாகவே இலங்கை செயற்படுமென குறிப்பிட்டார்.

மேலும், அமெரிக்காவின் ஜீ.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையானது 120 நாடுகளுக்கு கிடைப்பதாகவும், இலங்கையின் ஏற்றுமதியில் 110 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கே இந்த சலுகை கிடைப்பதாகவும் குறிப்பிட்டார். அந்தவகையில் இலங்கைக்கு பாரிய பாதிப்பு ஏற்படாதென ராஜித சுட்டிக்காட்டினார்.

மேலும், அமெரிக்காவின் ஜீ.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையை நீடிப்பதற்கு கால அவகாசம் எடுத்தாலும், இடைப்பட்ட காலப்பகுதியில் ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கான சலுகை கட்டணத்தை அமெரிக்கா திருப்பிச் செலுத்தும் என்றும், அதனால் இவ்விடயம் தொடர்பில் அச்சமடைய தேவையில்லை என்றும் குறிப்பிட்டார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg