Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

முத்தலாக் விவகாரத்தில் காங்கிரஸ் இரட்டை நிலைப்பாடு: அருண்ஜெட்லி

In இந்தியா
Updated: 09:30 GMT, Jan 3, 2018 | Published: 09:26 GMT, Jan 3, 2018 |
0 Comments
1184
This post was written by : Elakkiya

முத்தலாக் விவாகரத்து விடயத்தில் காங்கிரஸ் கட்சி இரட்டை நிலைப்பாட்டை கொண்டுள்ளதாக பா.ஜ.க. மூத்த தலைவரும் நிதி அமைச்சருமான அருண் ஜெட்லி குற்றம் சாட்டியுள்ளார்.

பா.ஜ.க. நாடாளுமன்றக்குழு கூட்டத்தில் அருண்ஜெட்லி மேற்படி தெரிவித்துள்ளதாக பாராளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சர் அனந்த குமார் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அனந்தகுமார் மேலும் தெரிவிக்கையில், “முத்தலாக் தடைச் சட்டமூலத்தை அனைத்து கட்சிகளும் ஒருமித்த கருத்துடன் நிறைவேற்றவே மத்திய அரசு விரும்புகின்றது. ஆனால் காங்கிரஸ் இந்த விவகாரத்தில் இரட்டை நிலைப்பாட்டை கொண்டுள்ளது. மக்களவையில் ஆதரவு தெரிவித்த காங்கிரஸ் மாநிலங்களவையில் முட்டுக்கட்டை போட முயற்சிப்பதாக அருண்ஜெட்லி கூறினார்” என்று தெரிவித்துள்ளார்.

பா.ஜ.க.வின் நாடாளுமன்றக்குழு கூட்டம் இன்று நடைபெற்றிருந்த நிலையில், பிரதமர் மோடி, பா.ஜ.க தேசிய தலைவர் அமித்ஷா ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.

மக்களவையில் தனிப் பெரும்பான்மையுடன் பா.ஜ.க உள்ளதால் முத்தலாக் எதிர்ப்பு சட்டமூலம் அங்கு எளிதில் நிறைவேற்றப்பட்டது. எனினும், மாநிலங்களவையில் பா.ஜ.க.வுக்கு பெரும்பான்மை இல்லை என்ற நிலையில், சட்டமூலத்தை நிறைவேற்றுவதற்கு எதிர்க்கட்சிகளின் ஆதரவு மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணியில் சாரத ஆதரவு கட்சி உறுப்பினர்களை சார்ந்து உள்ளது.

இந்த சட்டமூலம் இன்று மாலை 4 மணிக்கு மாநிலங்களவையில் சமர்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg