Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மகிழூர் பிரதேச அபிவிருத்தியின் ஆரம்பம் வெகுதொலைவில் இல்லை: ஐ.தே.க.

In இலங்கை
Updated: 09:30 GMT, Jan 3, 2018 | Published: 09:28 GMT, Jan 3, 2018 |
0 Comments
1094
icon_com
This post was written by : Risha
gfdgf

எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தல் மகிழூர் பெரும் பிரதேசத்தின் அபிவிருத்தியின் ஆரம்ப நாளாக அமையப் போகின்றது என மட்டக்களப்பு மாவட்டம் பட்டிருப்பு தொகுதியின் மகிழூர் வட்டாரத்தில் ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ந.சஞ்ஜீவ் தெரிவித்தார்.

குறித்த பகுதியில் நேற்று (செவ்வாய்க்கிழமை) பிரசார நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், ”அனைத்து வட்டார மக்களுக்கும் தங்கள் தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்காக அவர்களுடைய வட்டாரத்தில் இருந்தே ஓர் பிரதிநிதியை தெரிவு செய்யக்கூடிய சந்தர்ப்பம் வழங்கப்பட்டிருக்கின்றது. மக்கள் தங்களுடைய வாக்குப் பலத்தை சரியாகப் பயன்படுத்தாவிடின் எதிர்வரும் 5 ஆண்டுகள் தங்கள் கிராமத்தினை இருளுக்குள் தள்ளவேண்டி ஏற்படும்.

எனவே, போலி வார்த்தைகளுக்கும், உணர்ச்சிபூர்வமான வார்த்தைகளுக்கும் மயங்கி தங்களுடைய வாக்குகளை வழங்குவார்களாயின் தங்கள் கிராமத்தினை தாங்களே படுகுழியினுள் தள்ளுவதாகவே அமையும்.

எனினும், மக்கள் இத்தேர்தலில் தெளிவடைந்திருப்பது அவதானிக்கக் கூடியதாக இருக்கின்றது. ஏமாற்றுப் பேர்வழிகளுக்கு இம்முறை தகுந்த பாடம் புகட்டுவதற்கு மக்கள் தயாராக இருக்கின்றனர்” என அவர் மேலும் தெரிவித்தார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg