Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஆன்மீகம் என்ற வார்த்தையை அரசியலில் பயன்படுத்துவது தவறாகும்: டி.டி.வி. தினகரன்

In இந்தியா
Updated: 09:41 GMT, Jan 3, 2018 | Published: 09:41 GMT, Jan 3, 2018 |
0 Comments
1175
This post was written by : Elakkiya

ஆன்மீகம் என்ற வார்த்தையை அரசியலில் பயன்படுத்துவது தவறாக முடியும் என நடிகர் ரஜினியின் அரசியல் பிரவேசம் தொடர்பாக டி.டி.வி. தினகரன் கருத்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக சென்னை அடையாறிலுள்ள தனது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்து கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது, “ஆன்மீகம் என்பது ஒவ்வொரு தனிமனிதனின் தனிப்பட்ட விடயம். எனக்கு கடவுள் பக்தி உள்ளது என்பதற்காக மற்றவர்களிடமும் அதனை எதிர்பார்க்க முடியாது. மதம் என்பது வாழ்க்கை முறை. இறைவழிபாடு என்பது எம்மை நாமே ஒழுக்கப்படுத்திக் கொள்வதற்காக உள்ளது. இதனை அரசியலில் பயன்படுத்தினால் தவறாகும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை தனது அரசியல் பிரவேசம் குறித்த அறிவிப்பை வெளியிட்ட நடிகர் ரஜினிகாந்த், தமிழகத்தில் சாதி பாகுபாடற்ற நேர்மையான ஆன்மீக கலாசாரத்தை உருவாக்குவதே தனது அரசியல் பிரவேசத்தின் இலக்கும் என்று தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg