Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தரம் 10 வகுப்பை ஆரம்பிக்க வலியுறுத்தி பொன்னாலை மக்கள் போராட்டம்

In இலங்கை
Updated: 09:47 GMT, Jan 3, 2018 | Published: 09:47 GMT, Jan 3, 2018 |
0 Comments
1198
This post was written by : Risha

பொன்னாலை வரதராஜப் பெருமாள் வித்தியாசாலையில் தரம் 10ஐ ஆரம்பிக்குமாறு கோரி மாணவர்களும் பெற்றோரும் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

குறித்த கோரிக்கையை முன்வைத்து நேற்று (செவ்வாய்க்கிழமை) முதல் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

பொன்னாலை வரதராஜப் பெருமாள் வித்தியாசாலையில் தற்போது தரம் 9 வரையே வகுப்புக்கள் இடம்பெறுகின்ற நிலையில், பாடசாலையில் க.பொ.த சாதாரண தர வகுப்புக்களை ஆரம்பிக்குமாறு பழைய மாணவர்களும் பெற்றோர்களும் பல வருடங்களாகக் கோரி வந்த நிலையிலேயே இப்போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இப்பாடசாலையில் தரம் 9இல் கல்வி கற்றுவிட்டு வேறு பாடசாலைகளுக்குச் செல்பவர்கள் உரிய போக்குவரத்து வசதிகள் இன்மையால் இடைவிலகுகின்றனர்.

இதனால் பொன்னாலைக் கிராமம் கல்வியில் தொடர்ச்சியாகப் பின்னடைந்து வருகின்றது என பெற்றோர் தெரிவித்தனர்.

தமது பாடசாலையில் தரம் 10 வகுப்பை ஆரம்பிக்க அனுமதி வழங்கும் வரை தாங்கள் போராட்டத்தை கைவிடப் போவதில்லை எனவும் பெற்றோர்களும் மாணவர்களும் உறுதியாகக் கூறியுள்ளனர்.

இது குறித்து பழைய மாணவர் சங்கச் செயலாளர் கூறுகையில், ”2018ஆம் ஆண்டு முதல் தரம் 10ஐ ஆரம்பித்து அடுத்த வருடம் க.பொ.த சாதாரண தர வகுப்புக்களை நடத்துமாறு வலிகாமம் வலயக் கல்வி அலுவலகத்துக்கு கடந்த நவம்பர் 28ஆம் திகதி கடிதம் மூலம் கோரிக்கை விடுத்திருந்தோம்.

ஒரு மாதம் தாமதித்து டிசம்பர் 28ஆம் திகதி, இவ்வருடம் தரம் 10 வகுப்பை ஆரம்பிக்க முடியாது என வலயக் கல்விப் பணிப்பாளர் அறிவித்தார்’ எனத் தெரிவித்தார்.

2231 (1) 2231 (6)

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg