உயர் ரக வாகனமொன்றிற்கு தீ வைத்த சந்தேகநபருக்கு பொலிஸார் வலைவீச்சு!
This post was written by : Anojkiyan

ரொறொன்ரோ பகுதியில் உயர் ரக வாகனமொன்றை எரித்த குற்றச்சாட்டில் சந்தேகநபரை கைதுசெய்வதற்கு பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.
கடந்த டிசம்பர் 29ஆம் திகதி அதிகாலை 5.30 மணியளவில் ஓ’கோனர் டிரைவ் மற்றும் சென்.கிளையர் அவெனியுவில் இச்சம்பவம் நடந்துள்ளது.
அடையாளம் தெரியாத நபர் ஒருவர், போர்ச் ரக வாகனமொன்றை அணுகி பெற்றோலை காரிற்குள் ஊற்றி தீவைத்து விட்டு அவ்விடத்தை ஓடும் கணொளி அந்த வாகனத்தின் பாதுகாப்பு கெமராவில் பதியப்பட்டிருந்தது.
இந்நிலையில், இந்த கணொளியினை வைத்து தீவிர விசாரணைகளை மேற்கொண்டுவரும் பொலிஸார், சந்தேச நபர் குறித்து தகவல் தெரிந்தவர்கள் தம்மை தொடர்புக் கொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளனர்.