Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தேசிய அரசாங்கம் தொடருமா? – அமைச்சர்கள் கூட்டாக பதில்

In இலங்கை
Published: 10:28 GMT, Jan 3, 2018 |
0 Comments
1217
This post was written by : Varshini

எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கு பின்னர், தேசிய அரசாங்கத்தை நீடிப்பது தொடர்பான ஒப்பந்தம் குறித்து ஆராயப்படுமென அமைச்சரவை இணைப் பேச்சாளரும் அமைச்சருமான தயாசிறி ஜயசேகர குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்கள கேட்போர் கூடத்தில் இன்று (புதன்கிழமை) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் மாநாட்டில், ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில் அவர் இவ்வாறு கூறினார்.

எதிர்வரும் 2020ஆம் ஆண்டுவரை தேசிய அரசாங்கம் நீடிக்கும் என்பதில் உறுதியாக இருந்தாலும், எழுத்து வடிவில் அதற்கான ஒப்பந்தம் ஒன்று அவசியம் என்ற காரணத்தினாலே இதுகுறித்து கலந்துரையாடப்படவுள்ளதாக அமைச்சர் ராஜித சேனாரத்ன குறிப்பிட்டார்.

அத்தோடு, தேசிய அரசாங்கத்தை எதிர்வரும் 2020ஆம் ஆண்டுவரை கொண்டுசெல்வதில் எவ்வித சந்தேகமும் இல்லையென அமைச்சர் கயந்த கருணாதிலகவும் குறிப்பிட்டார்.

ஐக்கிய தேசியக் கட்சியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் இணைந்து கடந்த 2015ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31ஆம் திகதி ஏற்படுத்திய தேசிய அரசாங்கம் தொடர்பான இரண்டு வருட கால ஒப்பந்தம், கடந்த 2017ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31ஆம் திகதியுடன் நிறைவடைந்தது.

இரு பிரதான கட்சிகளும் தனித்து ஆட்சியமைப்பதில் அதிக ஆர்வம் கொண்டுள்ள நிலையில், எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தல் முடிவுகள் இந்த ஒப்பந்தம் தொடர்பில் அதிகம் தாக்கம் செலுத்துமென அரசியல் அவதானிகள் எதிர்வுகூறுகின்றனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg