Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அப்பலோ மருத்துவமனைக்கு கால அவகாசம் வழங்கியது விசாரணை ஆணையகம்

In இந்தியா
Updated: 10:39 GMT, Jan 3, 2018 | Published: 10:37 GMT, Jan 3, 2018 |
0 Comments
1185
This post was written by : Elakkiya

மறைந்த தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட சிகிச்சை தொடர்பாக விளக்கம் அளிப்பதற்கு அப்பலோ மருத்துவமனைக்கு கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

ஜெயலலிதாவின் மரணம் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ளும் முன்னாள் நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையகம் ஜனவரி 5 ஆம் திகதி சிகிச்சை தொடர்பான ஆவணங்களை வழங்க வேண்டு என்றும் விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் அப்பலோ மருத்துவமனைக்கு உத்தரவிட்டிருந்த நிலையில் தற்போது 12 ஆம் திகதி வரை கால அவகாசம் வழங்கியுள்ளது.

ஜெயலலிதாவின் மரண விசாரணைகளில் ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன், குடும்ப மருத்துவர் சிவக்குமார் ஆகியோரை அடுத்த வாரம் நேரில் ஆஜராகுமாறு அழைப்பாணை அனுப்ப தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை ஜெயலலிதாவின் உடலை எம்பாமிங் செய்த மருத்துவர் சுதா சேஷய்யன் இன்றையதினம் ஆஜராகி விளக்கமளித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg