2000 ரூபாய்க்கு சந்தைக்கு வருகின்றது நவீன ஸ்மார்ட்போன்! – கூகுளின் புதிய திட்டம்!

2018 வருட ஆரம்பத்தில் மிகக் குறைந்த அன்ரொய்ட் ஒரியோ ஸ்மார்ட்போன்களை வெளியிட கூகுள் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதன்படி 2000 ரூபா (இந்தியப் பெறுமதி) விலையில் கூகுள் மற்றும் மைக்ரோமெக்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து மலிவு விலையில் இம்மாத இறுதிக்குள் ஸ்மார்ட்போன்களை வெளியிட தீர்மானித்துள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
அன்ரொய்ட் கோ எனப்படும் இந்தத் திட்டத்தினை மைக்ரோமெக்ஸ் மூலமாக அறிமுகப்படுத்தப்பட அதனைத் தொடர்ந்து லாவா, இன்டெக்ஸ், கார்பன் ஆகிய நிறுவனங்களும் மலிவு விலை ஸ்மார்ட் போன்களை வெளியிட திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்தத்திட்டத்தின் முதலாவது ஸ்மார்போனுக்கு 31 அமெரிக்க டொலர்கள் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இனிவரும் நாட்களில் மிகக்குறைந்த விலையில் நவீன ஸ்மார் தொலைபேசிகளைப் பெற்றுக்கொள்ளலாம் என்பது ஆண்ரொய்ட் பாவனையாளர்களின் எதிர்பார்ப்பு.
மேலும், 1 ஜிபி ரெம், 8 ஜிபி நினைவகம் ஆகிய தொழில் நுட்பத்துடன் கூடிய வகையில், திறன்வாய்ந்த கேமராக்களுடன் இந்த மலிவு ஸ்மார்ட் போன்கள் கூடியவிரைவில் சந்தைக்கு வரவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.