Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

திருப்பழுகாமத்தில் குப்பை கொட்டுவதற்கு தற்காலிக தடை

In இலங்கை
Updated: 10:40 GMT, Jan 3, 2018 | Published: 10:40 GMT, Jan 3, 2018 |
0 Comments
1248
This post was written by : Risha
DSC08106

மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுப்பற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட திருப்பழுகாமத்தில் குப்பைகள் கொட்டப்படுவதற்கு எதிராக பிரதேச மக்கள் இன்று (புதன்கிழமை) பாரிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இப்பிரச்சினைக்கு தீர்வுகாண ஒரு மாத கால அவகாசம் கோரப்பட்ட போதிலும், அதற்கும் மக்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், குப்பை கொட்டுவது தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

குறித்த பகுதியில் குப்பைகள் கொட்;டப்படுவதனால் விவசாய நிலங்கள் பாதிக்கப்படுவதுடன் நீர்நிலைகளும், இயற்கை சூழலும் மாசடைவதாகவும் இதனால் குடியிருப்பாளர்கள் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி வருவதாகவும் பிரதேச மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

இதன்போது சம்பவ இடத்திற்கு வருகைதந்த போரதீவுப்பற்று பிரதேசசபையின் செயலாளர் ஏ.ஆதித்தன் ஆர்ப்பாட்டக்காரர்களுடன் கலந்துரையாடியதுடன் ஒரு மாதம் தமக்கு கால அவகாசம் வழங்குமாறு கோரிக்கை விடுத்தார்.

எனினும் அதனை நிராகரித்த மக்கள் இப்பகுதியில் குப்பைகொட்டுவதற்கு இனியொருபோதும் அனுமதிக்கமாட்டோம் என தெரிவித்ததுடன் தமது பிரச்சினைகள் தொடர்பில் பல தடவைகள் கவனத்திற்கும் கொண்டுவந்தபோதிலும் பிரதேசசபை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லையென பிரதேச மக்கள் குற்றஞ்சாட்டினர்.

இதன்போது குறித்த பகுதியில் குப்பை கொட்டுவதை தற்காலிகமாக நிறுத்துவதாகவும், நாளை காலை விசேட கூட்டம் ஒன்றை கூட்டி தீர்மானம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளதாகவும் பிரதேச சபையின் செயலாளர் தெரிவித்தார்.

2008ஆம் ஆண்டு போரதீவுப்பற்று பிரதேச சபையினால் குறித்த பகுதியில் சேதனைப் பசளை தயாரிப்பதற்கு என இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டு அங்கு குப்பைகள் கொட்டப்பட்டு வந்துள்ளன. பின்னர் சேதனப்பசளை தயாரிக்கும் நடவடிக்கை கைவிடப்பட்டு கொப்பை கொட்டும் இடமாகவே மாறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

DSC08090 DSC08134

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg