Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வெயிலுக்கு இதமான மோர் இட்லி தயாரிக்கும் முறை!

In
Updated: 10:37 GMT, Jan 3, 2018 | Published: 10:37 GMT, Jan 3, 2018 |
0 Comments
1202
This post was written by : Puvanes

என்னதான் நாகரீக உணவுகளும், ஆங்கில உணவுகளும் எம்மையும், நாவையும் ஈர்த்து வந்தாலும் இட்லி போன்ற காலை உணவை தேடிப்பிடிக்கவேண்டும்.

இட்லி என்றாலே தனிச்சிறப்பு உண்டு. அதிலும் பல்வேறு வகையான இட்லிகள் உண்டு, எவ்வொன்றும் தனிச்சுவைக் கொண்டவை. அந்தவகையில் வெயில் காலத்தில் இதம் தரக்கூடிய மோர் இட்லி செய்யும் முறையைப் பார்க்கலாம்.

இட்லிமாவு – தேவையான அளவு, கெட்டியான மோர் 2 கப், மோர் மிளகாய் வத்தல் – 10, அத்தோடு 5 சிவப்பு மிளகாய்கள், சிறிதளவு கொத்தமல்லி ஆகியவற்றை எடுத்துக்கொள்ளுங்கள்.

முதலில் இட்லியை அவித்து எடுத்துக்கொள்ளவும். சூடு அடங்கிய பின்னர் அவற்றினைச் சிறிய துண்டுகளாக வெட்டிக்கொள்ளவேண்டும்.

அடுத்து வெந்தயம், உப்பு, மிளகாய் ஆகியவற்றை நன்றாக அரைத்துக்கொள்ளவும். மோர் வத்தலையும் பொரித்து எடுத்துக்கொள்ளவும். மோரை இரு பகுதிகளாக பிரித்து ஒன்றில் அரைத்தபொடியை கலந்து கொள்ளவும்.

மீதமுள்ள மோரில் சிறிது தண்ணீர் கலந்து இட்லி துண்டுகளில் அதில் போட்டு அரை மணித்தியாலயம் நன்றாக ஊறவைத்து எடுத்துக்கொள்ளவும். அதன் பின்னர் மிளகாய்ப் பொடி கலந்த மோரை அதன்மேல் ஊற்றி கொத்தமல்லியை தூவி விட்டு எடுத்தால் இதமான மோர்இட்லி தயார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg