Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

விஜய்யுடன் மீண்டும் இணையும் கீர்த்தி சுரேஷ்

In சினிமா
Updated: 11:45 GMT, Jan 3, 2018 | Published: 11:11 GMT, Jan 3, 2018 |
0 Comments
1198
icon_com
This post was written by : Risha
Vijay-and-Keerthy-Suresh-in-Bairavaa-movie

பைரவா படத்தில் விஜய் ஜோடியாக நடித்திருந்த கீர்த்தி சுரேஷ், மீண்டும் விஜய்யுடன் இணைய வாய்ப்பு கிட்டியுள்ளது.

விஜய் நடிக்கவிருக்கும் ”தளபதி 62′ படத்தில் அவருக்கு ஜோடியாக, கீர்த்தி சுரேஷ் ஒப்பந்தமாகியிருப்பதாக உத்தியோகப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மெர்சல் வெற்றிப் படத்தை தொடர்ந்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் பிரமாண்டமாக தயாரிக்கும் படத்தில் விஜய்யும் நடிக்கவுள்ளார்.

மெர்சல் படத்தில் நடித்திருந்த யோகி பாபு, இந்த படத்திலும் நகைச்சுவை நடிகராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

கிரிஸ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு, படத்தொகுப்பு பணிகளை தேசிய விருது வென்ற ஸ்ரீகர் பிரசாத்தும், கலை பணிகளை சந்தானமும் முன்னெடுக்கவுள்ளனர்.

எதிர்வரும் பெப்ரவரி மாதம் இப்படத்தின் படப்பிடிப்புகள் ஆரம்பமாகவுள்ள நிலையில், படம் எதிர்வரும் தீபாவளி தினத்தில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg