Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஈ.பி.டி.பி கட்சி வேட்பாளரின் தாயார் மீது தாக்குதல்: மூவர் கைது

In இலங்கை
Updated: 11:05 GMT, Jan 3, 2018 | Published: 11:03 GMT, Jan 3, 2018 |
0 Comments
1213
This post was written by : Elakkiya
crime-arrest

வவுனியா மகாறம்பைக்குளம் பகுதியில் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் வவுனியா தெற்கு பிரதேச சபையின் வேட்பாளர் தர்மகுலசிங்கம் சுஜிவன் என்பவரது தாயார் மீது இனந்தெரியாதோரால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

நேற்று (செவ்வாய்க்கிழமை) இரவு 7 மணியளவில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட தர்மகுலசிங்கம் சத்தியதேவி என்பவர் தெரிவிக்கையில், “இரவு 7 மணியளவில் எனது மகனைத் தேடி மூவர் வீட்டிற்கு வந்தனர். அவர் இல்லை வெளியில் சென்றுள்ளதாக கூறினேன். அதன்போது தகாத வாரத்தைகளால் என்னை பேசினர். அவ்வாறு கதைக்க வேண்டாமென  நான் தெரிவித்த போது தலைக்கவசத்தினால் என்னை அடித்து விட்டு, வீதியில் உங்கள் மகனை கண்டால் வெட்டுவோம் வீட்டுடன் கொழுத்துவோம் என அச்சுறுத்தி தப்பித்து சென்று விட்டனர்” என்று தெரிவித்துள்ளார்.

சம்பவம் தொடர்பாக வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதுடன் சம்பவத்துடன் தொடர்புடைய மூவர் கைது செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg