Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

உள்ளங்கையை பாருங்கள் உங்களைப் பற்றி அறியுங்கள்! – கைரேகை சொல்லும் இரகசியம்

In ஆன்மீகம்
Updated: 11:05 GMT, Jan 3, 2018 | Published: 11:05 GMT, Jan 3, 2018 |
0 Comments
3639
This post was written by : Puvanes

அறிவியலும், தொழில் நுட்பமும் வளர்ந்து கொண்டே சென்றாலும் சோதிடத்திற்கு என ஓர் தனிச்சிறப்பு உண்டு. காரணம் ஒருவருடைய எதிர்காலம் அல்லது தன்னைப்பற்றி அறிந்து கொள்வதற்கு சோதிடம் வழி சமைக்கின்றது.

சோதிடங்கள் கிரகக் கணிப்பு, நாடி, குறி சொல்லுதல், இப்படி பல்வேறு வகைகளில் இருந்தாலும் கைரேகை சொல்லும் சோதிடத்திற்கு தனிச்சிறப்பு உண்டு. ரேகைகள் மனிதனை நிர்ணயிக்கின்றன என்பது நம்பிக்கை.

அறிவியலாலும் கூட இதனை விளக்க முடிவதில்லை அவ்வகையில் ஒருவரின் தனிப்பட்ட வாழ்க்கையை, அவரின் இரகசியங்களை ரேகைகள் காட்டுவதாய் அமைகின்றன.

அவ்வகையில் உள்ளங்கையில் எம் (M) வடிவரேகை காணப்படுமாயின் அவர்களின் காதல் வாழ்வு சிறப்பானதாக அமையும் என கைரேகை சாத்திரம் கூறுகின்றது. இந்த வடிவத்தில் ரேகை அமைந்திருந்தால் அவர்களுடைய வாழ்வு மகிழ்ச்சியானதாக அமையுமாம்.

மேலும் உள்ளங்கையில் எம் வடிவத்தில் ரேகை அமைப்பை கொண்டுள்ளவர்களுக்கு நல்வாய்ப்புகள் தேடிவரும், தலைமைப்பண்பும் இயல்பாகவே காணப்படும், அதிலும் வலது கையில் இந்த வடிவத்தில் ரேகை காணப்பட்டால் அவர்கள் செல்வச் செழிப்புடன் வாழ்பவர்களாக இருப்பார்களாம்.

அதேபோல இடது கையில் எம் வடிவ ரேகை இருந்தால் அவர்களுக்கு இல்வாழ்க்கை சிறப்பானதாக அமையும். தாய், தாரம் என்ற அன்பு நிலைத்து கிடைக்கும் காதல் வாழ்வும் சுகமானதாக அமையும் என்கின்றது கைரேகை சோதிடம்.

இந்த கைரேகை பலன்களானது மேலைத்தேய சோதிட முறைகளிலும் பிரபல்யம் என்பது குறிப்பிடத்தக்கது.

hand002

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg