Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஈரானிய அரசுக்கு எதிராக தடைகள் விதிக்கப்பட வேண்டும்: ஆண்ட்ரூ ஷெர்ர்

In கனடா
Updated: 11:14 GMT, Jan 3, 2018 | Published: 11:14 GMT, Jan 3, 2018 |
0 Comments
1098
This post was written by : Anojkiyan

வெளிநாடுகளில் உள்ள பயங்கரவாதங்களுக்கு தொடர்ந்து உதவியளிக்கும், உலகிலேயே மோசமான சர்வாதிகார ஆட்சி நடாத்தும் ஈரானிய அரசுக்கு எதிராக தடைகள் விதிக்கப்பட வேண்டும் என கனேடிய எதிர்க்கட்சியான பழமைவாதக் கட்சியின் தலைவர் ஆண்ட்ரூ ஷெர்ர் குறிப்பிட்டுள்ளார்.

ஈரானில் ஏற்பட்டுள்ள விலைவாசி அதிகரிப்பு உள்ளிட்ட பொருளாதார சிக்கல்களுக்கு நீதி கோரி, முன்னெடுக்கப்பட்டுவரும் போராட்டங்கள் குறித்து கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

ஈரானிய மக்களிடம் உள்ள ஜனநாயக உரிமை மற்றும் சுதந்திரம் ஆகியன இந்த போராட்டங்கள் மூலம் வெளிப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, ஈரானிய மக்கள் தமது அடிப்படை உரிமைகளை வெளிக்காட்டும் வகையில் அமைதியான போராட்டங்களை முன்னெடுப்பதனை கனடா வரவேற்பதாகவும், மக்களின் ஜனநாயக் மற்றும் மனித உரிமைகளை ஈரானிய அதிகாரிகள் மதிக்க வேண்டும் எனவும் கனேடிய வெளியுறவு திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg