Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

உடனடித் தொலைபேசி அழைப்பு வசதி: தென்கொரியா வரவேற்பு

In உலகம்
Published: 11:04 GMT, Jan 3, 2018 |
0 Comments
1126
This post was written by : Suganthini

குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் கலந்துகொள்வது தொடர்பாக ஆலோசிக்கும் வகையில், உடனடியான அழைப்புகளை (ஹொட்லைன்) மேற்கொள்வதற்கான தொலைபேசி வசதியை வடகொரியா மீண்டும் ஏற்படுத்தியுள்ளமைக்கு, தென்கொரியா வரவேற்புத் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், வடகொரியாவிடமிருந்து இன்று (புதன்கிழமை) காலை அழைப்புக் கிடைத்துள்ளதாக, தென்கொரியா உறுதிப்படுத்தியுள்ளது.

தென்கொரியாவில் எதிர்வரும் பெப்ரவரில் நடைபெறவுள்ள குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் கலந்துகொள்ளும் வகையில், வடகொரியாவிலிருந்து குழுவொன்றை அனுப்பவுள்ளமை தொடர்பாக கவனம் செலுத்துவதுடன், இது தொடர்பாகத் தென்கொரியாவுடன் கலந்துரையாடவுள்ளதாகவும், வடகொரிய ஜனாதிபதி கிம் ஜொங் உன் ஏற்கெனவே தெரிவித்திருந்தார். இதற்கு தென்கொரியா சாதகமான சமிக்ஞை காட்டியதுடன், எதிர்வரும் 9ஆம் திகதி வடகொரியாவுடன் உயர்மட்டக் கலந்துரையாடலுக்கும் அழைப்பு விடுத்துள்ளது.

இதனையடுத்து, தென்கொரியாவுடன் உடனடியான அழைப்புகளை மேற்கொள்வதற்கான தொலைபேசி வசதியை மீண்டும் ஏற்படுத்தியுள்ள வடகொரியா, தென்கொரியாவுடன் நெருக்கமாகவிருந்து நேர்மையான முறையில் தொடர்பைப் பேணவுள்ளதாகவும், கூறியுள்ளது.

இந்த இரு நாடுகளுக்குமிடையில் கடந்த 2015ஆம் ஆண்டு டிசெம்பரிலிருந்து பெரியளவிலான பேச்சுவார்த்தைகள் எதுவும் நடைபெறவில்லையென்பது குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg